21 March 2017 0 Comments Report

கீத் நொயார் சம்பவம் தொடர்பிலான ராணுவ புலனாய்வு அலுவலர் கைது..!!

ஊடகவியலாளர் கீத் நொயாருக்கு தாக்குதல் மேற்கொண்டு காயப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

குற்றபுலனாய்வு பிரிவினரால் குறித்த அலுவலர் நேற்றிரவு (20) கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி தெஹிவலை பிரதேசத்தில் கீத் நொயரின் வீட்டின் முன்பாக வேன் ஒன்றின் வந்த அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தியதுடன் அவரை தாக்கியுள்ளனர்.

அந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட குற்றவிசாரணை திணைக்களம் குறித்த ராணுவ கோப்ரலை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 34 வயதான வேகொவ்வ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று (21) கல்கிசை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே ராணுவ உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Post a Comment

*