21 March 2017 0 Comments Report

பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்ட ரஷ்யப் பிரஜைகள் இருவர் கைது..!!

உரிய வீசா அனுமதிப் பத்திரம் இன்றி நாட்டில் தங்கியிருந்த வௌிநாட்டுப் பிரஜைகள் இருவர் வெலிகம – மிரிஸ்ஸ பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வெலிகம பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர்களான 25 மற்றும் 30 வயதையுடைய ரஷ்யப் பிரஜைகள் இருவரும், பச்சை குத்தும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இருவரையும் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Post a Comment

*