21 April 2017 0 Comments Report

தனுஷ் எங்கள் மகன் …. கதிரேசன், மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..!! (வீடியோ)

தனுஷ் தங்களது மகன் என கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை மேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நடிகர் தனுஷின் கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை ரத்து செய்துள்ளது.

நடிகர் தனுஷ் தங்களது மகன் எனக்கூறி கதிரேசன், மீனாட்சி தம்பதி கடந்த நவம்பர் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பல்வேறு சர்ச்சைகளுடன் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தனுஷின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கதிரேசன் மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர். இதன்மூலம் நீண்ட நாட்களா சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி வந்த இந்த வழக்கில் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனுசின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால், டி.என்.ஏ. சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கதிரேசன் தம்பதி கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இன்று காலை 10 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், தனுஷ் தங்கள் மகன் என்று கதிரேசன் – மீனாட்சி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிடப்பட்டது.


Post a Comment

*