21 April 2017 0 Comments Report

டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைக்கவுள்ள மோடி..!!

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையை, மே மாதம் 12 ம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்னன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகை தொடர்பில், மலையக புதிய. கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தலைமையில் நேற்று (20) மாலை நோர்வூட் விளையாட்டு மைதானத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடபெற்றது.

கலந்துரையாடலில் மலையக புதிய. கிராமங்கள் உட்டகட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம், நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முள்ள, கல்வி ராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்னன் உட்பட இந்தியாவிலிருந்து வருகை தந்த விசேட குழுவினரும் கலந்துகொண்டனர்.

இந்திய அரசாங்கத்தின் 500 மில்லியன் நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் புதிய கட்டிட திறப்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கரமசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதுடன், நோர்வுட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள கூட்டத்திலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவுள்ளதாக அமைச்சர் இராதாகிருஸ்னன் தெரிவித்தார்.


Post a Comment

*