21 April 2017 0 Comments Report

மகாராஷ்டிராவில் மினி பஸ் – லாரி மோதல்: 6 பயணிகள் உயிரிழப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூர் மாவட்டம் காந்தி நகரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பஸ் ஒன்று சோலாப்பூரில் உள்ள பந்தர்பூருக்கு சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலையில் சங்லி மாவட்டம் அகல்கான் பத்தா என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சங்லி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விபத்தில் 6 பேர் பலியானதாகவும், 13 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

*