21 April 2017 0 Comments Report

நாளை போராட்டம் செய்ய தடை உத்தரவு..!!

பிலியந்தலை, கரடியான பிரதேசத்தில் உள்ள குப்பைகூடத்திற்கு எதிராக நாளை இடம்பெற இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

பிலியந்தலை பொலிஸாரினால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதேசத்தில் ஒன்றுசேர்கின்ற தின்மக் கழிவுகளை பிலியந்தலை, கரடியான பிரதேசத்தில் உள்ள குப்பைகூடத்தில் கொட்டுவதற்கு எதிராக நாளை போராட்டம் ஒன்று இடம்பெற இருந்தது.


Post a Comment

*