;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (18.01.2018)

0

இரக்குவானை தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக உபாலி சந்திரசேன

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரக்குவானை தேர்தல் தொகுதியின் தலைமை அமைப்பாளராக உபாலி சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த நியமனம் இன்று வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், குறித்த தொகுதியின் தலைமை அமைப்பாளராக இருந்த ரஞ்சித் சொய்ஸா குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் சூடு பிடிப்பு

பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துகளை வழங்கி வருகின்றனர்.

இந்தவகையில், “கிராமத்துக்கு ​வேண்டிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்” என, சஜித் பிரேமதாஸ, ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் வட்டகல, “தமது கட்சி பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்குக் கடமைப்பட்டுள்ளது” என உறுதியளித்துள்ளார்.

அநுராதபுர பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில், ரோஷன் ரணசிங்க குறிப்பிடுகையில், “நடைபெறயிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்” என்றார்.

“இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அரசாங்கத்தையோ அல்லது ஜனாதிபதித் தேர்தலையோ மாற்றும் எனச், சிலர் தவறாக நம்புகின்றனர் என, சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க மூவாயிரத்து 226 பேர் தகுதி! மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிக்க மூவாயிரத்து 226 பேர் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் டி.சி.அரவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் கேட்ட போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மூவாயிரத்து 471 அரச சேவையாளர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இதில் உரிய முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யாமை, திணைக்கள தலைவரின் கையொப்பம் பெறாமை உள்ளிட்ட சில காரணங்களால் இருநூற்று 45 பேரின் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் மூவாயிரத்து 226 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 22, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 2 =

*