;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (18.01.2018)

0

கைவிடப்பட்டது மின்சாரசபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு!!!

மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி அமைச்சின் செயலாளருடன் இன்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின் பல கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை பணியாளர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானித்துள்ளனர்.

உரிய தீர்வு கிடைக்காவிடினும் குறித்த அமைச்சின் செயலாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

ஹட்டனில் காட்டுத் தீ

ஹட்டன், ருவன்புர மாவலி கிராமத்துக்கு அருகாமையில் உள்ள வனப் பகுதியில் நேற்று (17) பற்றிக்கொண்ட காட்டுத் தீ, பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காட்டுப் பகுதியில் நேற்றிரவு திடீரென தீப்பற்றிக்கொண்டது. இது, விஷமிகள் சிலரின் வேலையாகவே இருக்கும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

மகரகம நகர சபைக்கு பொதுஜன பெரமுன போட்டியிடலாமா? நாளை தெரியும்..

மகரகம நகர சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான தீர்ப்பை நாளை வௌியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மகரகம நகர சபைத் தேர்தலுக்கான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பே நாளை அறிவிக்கப்பட உள்ளது.

அதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மனுக்கள் நாளை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*