;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (19.01.2018)

0


பொதுஜன பெரமுனவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி

மகரகம நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 06 பேர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்களால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த மனுவை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் தீர்மானித்ததாக நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

மகரகம நகர சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு பக்கத்தில் ஆண் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

வாகன இறக்குமதிக்குத் தடை

பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத அனைத்து வாகன இறக்குமதிகளுக்கு நிதியமைச்சு தடை விதித்துள்ளது.

ஆசனப்பட்டி, பாதுகாப்பு பலூன் ஆகிய பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகனங்களின் இறக்குமதியையே எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் தடை நிதியமைச்சு தடைசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றம்

சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திரானி சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் சிறுவர் உரிமை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கையின் இளம் தலைமுறைக்கு சர்வதேச தரத்திலான பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செயலாளர் கூறினார்.

இலங்கை சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் விவகாரத்தில் முன்னேற்றகரமான அரச கொள்கைகளை தொடர்ந்தும் அனுசரித்து வருகிறது. இவற்றில் சகலருக்கும் இலவச, சுகாதார வசதிகளை வழங்குவதும் உள்ளடங்கும். இதன் காரணமாக பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று திருமதி சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 + 13 =

*