;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (19.01.2018)

0

துறைமுக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது

ஹம்பாந்தோட்டை மாகம்புறை துறைமுக சேவையில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் மேற்கொண்ட உண்ணாவிரத போரட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர்.

இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து தமக்கு சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றிருப்பதால் அவர்கள் இந்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை, மாகம்புறை துறைமுக சேவையில் இருந்து நீக்கப்பட்ட பணியாளர்கள் கடந்த 09ம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

ஹம்பாந்தோட்டை, மாகம்புறை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு முன்னதாக நவம்பர் 30ம் திகதி முதல் இந்த ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், அவர்களுக்கு தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தற்போது சாதகமாக பதில் கிடைத்துள்ளதாகல் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

சீட் பெல்ட், காற்று பலூனற்ற வாகன இறக்குமதிக்குத் தடை

இருக்கைப் பட்டிகள் (சீட் பெல்ட்) மற்றும் காற்று பலூன் உள்ளிட்ட பயணிகள் பாதுகாப்புக்கான நடைமுறைகள் அற்ற வாகனங்களை, எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் கொள்வனவு செய்யத் தடை விதிக்கவுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் கீழ், வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகளின் பிரகாரமே, இந்தத் தடை விதிக்கப்படவுள்ளதென, அமைச்சு தெரிவித்தன.

கடந்த சில காலமாகவே, வாகனங்கள் தொடர்பான கொள்கைகளின் அடிப்படையில், சுத்தமோ அல்லது பசுமையோ பேணப்படவில்லை. நாட்டிலுள்ள அனைத்து வாகனங்களும், எதிர்வரும் 2040இல், எரிபொருளில் இயங்குவதைத் தவிர்த்து, ஏனைய சக்திகள் மூலம் இயங்குபவையாக மாற்றப்படும்.

இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசின் அனைத்து வாகனங்களையும் எதிர்வரும் 2025இல், ஹைப்ரிட் அல்லது மின்சாரத்தில் இயங்குத் வாகனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, அமைச்சு மேலும் தெரிவித்தது.

நாட்டில் இனபாகுபாடு இல்லையென – வே. இராதாகிருஸ்ணன் !

முன்னைய அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நாட்டில் இன பாகுபாடு காண ப்பட்டது. தற்போது அவை தகர்த்து எறியபட்டு நாட்டில் எந்த ஒரு இடத்திற்கும் ஜனாதிபதி உட்பட பிரதமரும் அனைத்து மக்களும் சென்று வரக்கூடிய சுதந்தி ரம் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர வேண்டுமானால் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டு மாம் கல்வி இரா ஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தழிழ் முற்போக்கு கூட்ட ணியின் பிரதி தலைவருமான வே. இராதாகிருஸ்ணன். நுவரேலியா மாவட்டம் கொட்டகலை பிரதசே சபையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்.மாவட்­டத்தில் 4,68476 வாக்­கா­ளர்கள் வாக்களிக்க தகுதியுடையோர் !

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தைச் சேர்ந்த 4 இலட்­சத்து 68 ஆயி­ரத்து 476 வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்­ப­தற்கு தகுதியுடையவர்கள் என யாழ். மாவட்ட தேர்தல் திணைக்­கள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்.மாவட்­டத்தில் யாழ்.மாந­கர சபை மற்றும் மூன்று நகர சபைகள், 13 பிர­தேச சபைகள் உட்­பட 17 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளு க்­கான தேர்­தலில் 2017 ஆம் ஆண்­டுக்­கான தேர்வு இடாப்­புக்கு அமைய 468476 வாக்­கா­ள ர்கள் வாக்­க­ளிக்க தகு­தி­ பெற்­றுள்­ளனர்.

யாழ்.மாந­கர சபைக்கு 56182 வாக்­கா­ளர்­களும், வல்­வெட்­டித்­துறை நகர சபைக்கு 6055 வாக்­கா­ளர்­களும், பருத்­தித்­துறை நகர சபைக்கு 7864 வாக்­கா­ளர்­களும், சாவகச்­சேரி நகர சபைக்கு 12490 வாக்­கா­ளர்­க ளும் தகுதி பெற்­றுள்­ளனர். மேலும் காரை­நகர் பிர­தேச சபைக்கு 8170 வாக்­கா­ளர்­களும், ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபைக்கு 7219 வாக்­கா­ளர்­களும், நெடுந்­தீவு பிர­தேச சபைக்கு 3174 வாக்­க­ாளர்­களும், வேலணைப் பிர­தேச சபைக்கு, 12763 வாக்­கா­ளர்­களும், வலி. மேற்குப் பிர­தேச சபைக்கு 34292 வாக்­கா­ளர்­களும்,

வலி.வடக்கு பிர­தேச சபைக்கு 60278 வாக்­கா­ளர்­களும், வலி.தென்­மேற்கு பிர­தேச சபைக்கு 37053 வாக்­கா­ளர்­களும், வலி.தெற்கு பிர­தேச சபைக்­கு 37086 வாக்­கா­ளர்­களும், வலி.கிழக்கு பிர­தேச சபைக்கு 35047 வாக்­கா­ளர்­களும், பருத்­தித்­துறை பிர­தேச சபைக்கு 29394 வாக்­கா­ளர்­களும்,

சாவ­கச்­சேரி பிர­தேச சபைக்கு 41 732 வாக்காளர்களும், நல்லூர் பிரதேச சபை க்கு 27100 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − twenty =

*