;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!! (19.01.2018) -வவுனியா-

0


வவுனியா பழைய பேருந்து நிலைய கட்டத்தொகுதியின் பாதை, மூடப்பட்டமையால் வர்த்தகர்கள் விசனம்

வவுனியா பழைய பேருந்து நிலைய கடைத்தொகுதிக்களிற்கு சொல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இப்பாதையில் புகைத்தல்இ மது பாவனை போன்ற பல சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறுகின்றது. மேலும் இப்பாதையினூடாகவே பணிகள் நகரசபையின் மலசல கூட தொகுதிக்கு செல்ல இலகுவான பாதையாகும். தற்போது இப்பாதை மூடப்பட்டமையால் வர்த்தகர்களும் பிராணிகளும் பொரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் இப்பாதை மூடப்பட்டமையால் மாற்று பாதையினூடாகவே மேல் மாடியில் உள்ள வர்த்தக தொகுதிக்கு மக்கள் செல்ல வேண்டியிருப்பதன் காரணமாக பல வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதுடன்இ சில வர்த்தகர்கள் தமது தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

பழைய பேரூந்து நிலையத்தில் தற்போது பேரூந்து சேவைகள் இடம்பெறாமையினால் அதிகளாவான வர்த்தகர்கள் வியாபரம் பாதிப்படைந்து வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் இப்பாதை மூடப்பட்டுள்ளமையால் மேலும் வியாபரம் பாதிப்படைவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையினை தவிர்ப்பதற்கு வவுனியா நகரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி வர்த்தகர்கள் கேட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடுர்பாக வவுனியா நகரசபையின் செயலளாhஜடம் கேட்டபோது இது தொடர்பாக கட்டிடங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளமையால் அவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்னரே தன்னால் அறிவித்தல் வழங்கப்பட:டள்ளதாகவும் எனினும கட்டிடங்கள் திணைக்களத்தின் பொறியிலாளர் பார்வையிட தாமதமாகிவருவதால் தாம் புனரமைப்பு பணியை செய்ய முடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.

வவுனியா பல்கலைக்கழக அனுமதிக்கான கருத்தரங்கு

பல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல வழிகாட்டல் கருத்தரங்கு யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வவுனியா வளாக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகங்களை தெரிவு செய்தல், பாடங்களை இனங்காணல் தொடர்பான வழிகாட்டல்கள் இடம்பெறவுள்ளது.

வவுனியா வளாக சிரேஸ்ட உதவிப்பதிவாளர் ஆர். ஜெயக்குமார், வவுனியா வளாக விரிவுரையாளர் ரி. கார்த்தீஸ்வரன், இரசாயனவியல் ஆசிரியர் ஏ. எஸ். பரந்தாமன் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே இலவலச அனுமதியுடன் இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில் உயர்தரத்தில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களையும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வவுனியா வளாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் கசிப்பு விற்பனை செய்த நபர் பொலிசாரால் கைது

வவுனியாவில் நேற்று மாலை சிதம்பரபுரம் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனை மேற்கொண்ட வடிவேல் சதீஸ்குமார் வயது 36 சிதம்பரநகரைச் சேர்ந்த நபர் ஒருவரை 750மில்லி லீற்றர் 750 மில்லி லீற்றராக சட்டவிரோதமாக போத்தலில் கசிப்பு விற்பனை செய்து கொண்டிருந்த போது சிதம்பரபரம் பொலிஸாரினால் கைது செய்துள்ளதாகவும்,

மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கபட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா நீதவான நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

வவுனியா டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு: சிவப்பு வலயமாக சில பகுதிகள் அறிவிப்பு

வவுனியா மாவட்டத்தில் சில இடங்கள் ‘டெங்கு சிவப்பு வலய’ பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 70 பேர் வரை டெங்கு நோயின் தாக்கத்திற்குள்ளாகியுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளது. வவுனியாவின் கற்குழி மற்றும் நெளுக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த 16 நாட்களில் 70 பேர் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர்.

இதனால் வவுனியாவின் கற்குழி, நெளுக்குளம் மற்றும் செட்டிக்குளத்தின் சில பகுதிகள் ‘டெங்கு சிவப்பு வலயமாக’ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டில் டெங்கு சிவப்பு வலயத்தில் 16 நாட்களில் எழுபது பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் கூடுதலானவர்கள் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களிற்கு சென்று வருபவர்களாகவே இருக்கின்றனர். இதே போல் இரண்டு வாரத்திற்கு முன்னரும் டெங்கு நோயின் தாக்கத்தில் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

எனவே வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களிற்கு செல்லும்போது டெங்கு தாக்கம் அதிகமுள்ள பகுதிகள் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிடும்போது அதற்கான உரிய அவதானத்தை எடுக்கவேண்டும்.

மேலும் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். டெங்கு நோய்குரிய அறிகுறி தெரியும் பட்சத்தில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − eleven =

*