;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (19.01.2018)

0


பஸ்ஸில் போதைப்பொருள் கொண்டு சென்றவர் கைது

கொழும்பிலிருந்து அம்பாறை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியில் போதைப் பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, இன்று (19) அதிகாலை 05.30 மணியளவில் அம்பாறை விசேட போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைத செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான விசாரணை அடுத்தவாரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, மஹரகம நகர சபை உள்ளிட்ட பிரதேச சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் 14 தொடர்பில் தாக்கல் செய்யப்பப்பட்ட மனு எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ( 19) உத்தரவிட்டுள்ளது.

மஹிந்த காலத்தில் இடம்பெற்ற 4000 பில்லியன் மோசடி வெளியாகியுள்ளது

மஹிந்த ராஜபக்ஷ காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள 4000 பில்லியன் ரூபா பிணைமுறி மோசடி தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய மேலும் ஒரு ஆணைக்குழுவை அமைக்கவுள்ளதாகவும்,சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த ஆட்சிக் காலத்தில் பிணை முறி மோசடிகளில் ஈடுபட்டோ​ரே, தற்போது பிணை முறி மோசடி குறித்து பேசிவருகின்றனர்.

அவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்களே தேர்தலிலும் போட்டியிட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துக்கென ​தொலைக்காட்சி சேவை ஆரம்பம்

நாட்டு மக்களிடையே சுகாதாரத்தைப் பேணும் நோக்கில், தேசிய சுகாதாரத் தொலைக்காட்சிச் சேவையொன்று, ​நாளை (20) முதல் கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதார நிலைமையைப் பேணல் மற்றும் சுகாதாரமானதொரு சமூகத்தைக் கட்டியெழுப்பல் என்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

தொற்றா நோய்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல், குடும்பநலச் சுகாதாரம் தொடர்பில் அறிவூட்டல், போஷாக்கு, விளையாட்டு மற்றும் வீட்டு வாழ்க்கை தொடர்பில் தெளிவூட்டல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், இந்தத் தொலைக்காட்சிச் சேவையூடாக ஒளி, ஒலிபரப்பப்படுமென, சுகாதார அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் பிரசன்ன அதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு கலதாரி ஹோட்டலில், இந்தத் தொலைக்காட்சிச் சேவை ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், அதன் பிரதம விருந்தினராக, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன கலந்துகொள்ளவுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*