;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!!

0

சட்டவிரோத பொலிதீன் தயாரிப்பு நிலையங்கள் சுற்றிவளைப்பு

தடை செய்யப்பட்டுள்ள பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தும் நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள 10 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக அந்த அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர கூறினார்.

மனிதப் பயன்பாட்டுக்கு உட்படக்கூடிய பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புக்களை மேற்கொள்கின்ற தனியார் நிறுவனங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

வில்பத்துவில் சட்டவிரோத மணல் அகழ்வு

வில்பத்து வனப்பகுதிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குழுவொன்று மணல் அள்ளிச் செல்வதாக வனப் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் கரையோர வள முகாமைத்துவ நிறுவனம் என்பவற்றின் அனுமதி பெற்றே தாம் மணல் அகழ்வதாக, போலி ஆவணங்களைக் காண்பித்து மேற்படி நபர்கள் மணல் அள்ளிச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை எனவும் தடுக்கப்படவேண்டியவை எனவும் வலியுறுத்தியிருக்கும் வனத்துறை இயக்குனர் நாயகம், குறித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியுள்ளார்.

கொழும்பு – பியகம வீதியில் போக்குவரத்து தடை!

வருடாந்த களனி விகாரை பெரஹரா உற்சவம் நடைபெறவிருப்பதை முன்னிட்டு, வீதிப் போக்குவரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இதன்படி, கொழும்பு – பியகம வீதியில் போக்குவரத்துக்கள் குறித்த தினங்களில், குறித்த நேரங்களில் தடை செய்யப்பட்டுள்ளன.

இன்று இருபதாம் திகதியும் 23 மற்றும் 27ஆம் திகதிகளிலும் மேற்படி வீதியில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 7 மணி வரை வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதை அனுசரித்து வாகன சாரதிகள் தமது பயணங்களைத் திட்டமிட்டுக்கொள்ளும்படி போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + 20 =

*