;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!!

0

உடனடி நடவடிக்கை வேண்டும்: ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தல்

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் ஊவா மாகாண முதலமைச்சர் முன் மண்டியிடச் செய்த விவகாரத்தில், அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன.

தான் மண்டியிடச் செய்தமை உண்மையே எனவும் ஊவா மாகாண கல்வித் துறை செயலாளரின் மிரட்டலையடுத்தே அப்படியொரு சம்பவம் நடைபெறவில்லை என்று தாம் கூற நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அதிபர் ஆர்.பவானி தெரிவித்தார்.

குறித்த பாடசாலைக்கு நேற்று (19) ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விஜயம் செய்தபோதே இவ்விவகாரம் வெளியே தெரியவந்தது.

அமெரிக்காவின் புதிய வரவு செலவு திட்டம் தோல்வி; பல அரச நிறுவனங்களை மூடும் நிலை

ஐக்கிய அமெரிக்காவின் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் நிறைவேற்றப்படாமை காரணமாக பல அரச நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தியவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த பல நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி தேசிய பாதுகாப்பு, தபால் சேவை, விமான போக்குவரத்து கட்டுப்பாடு, அவசர மருத்துவ சேவைகள், அனர்த்த உதவி, சிறைச்சாலைகள், வரிவிதிப்பு மற்றும் மின்சாரம் போன்ற சேவைத் துறைகள் அத்தியவசிய சேவைகளாக கருதப்படுகின்றன.

தேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா இடங்கள் பல இதனால் மூடப்பட உள்ளன.

அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாநிலத்திற்கான தனது விஜயத்தையும் இரத்து செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

வேட்பாளர்களே… சொத்து அறிக்கை சமர்ப்பித்துவிட்டீர்களா?

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த அறிக்கையை அளிக்க வேண்டிய கடைசி நாள் இன்று (20). இது எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 • இதன்படி, இன்றைய தினத்தினுள் சொத்து அறிக்கையைச் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  தேர்தல் விதிமுறைகளின்படி, வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன் தமது சொத்து அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். அப்படித் தவறுமிடத்து அவர்களது தேர்தல் அலுவலகங்களின் இயக்கம் தடை செய்யப்படுவது உட்பட அவர்கள் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியும்.

  மட்டுவில் ஒரு வாரத்தினுள் இரண்டு யானைகள் மர்ம மரணம்!!!

  மட்டக்களப்பு- வெல்லாவௌி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடை காட்டுப் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழிந்த நிலையில் யானை ஒன்று வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

  உயிரிழந்த யானை சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை எனவும், யானை எவ்வாறு உயிரிழந்துள்ளது என்பது தொடர்பான பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் அதன் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் எனவும் வன ஜீவராசிகள் பாதுப்புத் திணைக்கள பிரதேச சுற்றுவட்டப் பெறுப்பதிகாரி ஏ.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.

  இப் பிரதேசத்தை அண்டிய தாந்தாமலை காட்டுப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தினுள் மற்றுமோர் காட்டு யானை மர்மமான முறையில் இறந்ததமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 • You might also like

  Leave A Reply

  Your email address will not be published.

  fourteen + 13 =

  *