;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5..!!

0

முதலமைச்சரால் அதிபர் அச்சுறுத்தப்பட்டமைக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டனம்

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை அச்சுறுத்திய சம்பவத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி கண்டிப்பதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபரை தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அழைத்து திட்டி, அச்சுறுத்திய சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.

இது தொடர்பான விசாரணைகளை தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஆரம்பித்துள்ளது.

இந்திய மீனவர்கள் அத்துமீறும் செயற்பாடு குறைவு

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் செயற்பாடு நூற்றுக்கு 50% ஆல் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலத்தில் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் செயற்பாடு அதிகளவில் காணப்பட்டது.

இதுவரையில் இலங்கை கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் விளைவாக இந்திய மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்ட ரீதியான செயற்பாடுகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர்களது மீன்பிடி படகுகளை விடுவிக்காத காரணத்தால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறும் செயற்பாடு அதிகளவில் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து இராதலை வழியாக ஐந்து தோட்டப் பகுதிகளுக்கு செல்லும் சுமார் இரண்டு கிலோமீற்றர் வரையிலான பிரதான வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி, அக்பகுதி மக்கள் ​இன்று, எதிர்ப்பு பேரணி, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன்போது, 400க்கும் மேற்பட்டோர் விதிக்கு இறங்கி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன், எதிர்ப்பு கோசங்களை எழுப்பியவாறு, பேரணி ஒன்றையும் நடத்தினர்.

“நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரதாலை சந்தியிலிருந்து இப்பொலிஸ் பிரதேசத்தில் காணப்படும் மட்டுக்கலை தோட்ட இரு பிரிவுகள், கிலைண்டன், சென்கூம்ஸ் கீழ் பிரிவு மற்றும் மேல் பிரிவு ஆகிய 5 தோட்டப் பகுதிகளுக்கு நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் இருந்து பயணிக்க இலகுவான சுமார் 2 கிலோமீற்றர் வரையான பிரதான வீதி காணப்படுகின்றது.

“இந்த வீதி கடந்த பல வருடகாலமாக சீர்த்திருத்தப்படாமல் குன்றும் குழியுமாகிய நிலையில் மக்கள் பாவணைக்கு உதவாமல் காணப்படுகின்றது.

“இது தொடர்பில், அரசியல்வாதிகள் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தோட்ட கம்பியை நிர்வாகங்கள் என பலரிடமும் பிரதேச மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டும் வீதியின் அவலநிலை மேலும் தொடர்ந்துள்ளதே தவிர, புனரமைக்கப்படவில்லை.

“இந்த நிலையில் கடந்த பொது தேர்தலின் போதும் கூட பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, நுவரெலியா மாவட்ட மக்களை பிரதநிதித்துவப் படுத்தும் பிரபல கட்சி ஒன்றின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவர் முன்வந்து இவ்வீதியை செப்பனிட கல், மணல் என கொண்டு வந்து குவித்துள்ளார்.

“ஆனால், ஆட்சி மாற்றம் மற்றும் பிரதேசவாசிகளின் உள்ளக கட்சி பிரச்சினையால் காலப்போக்கில் கொண்டு வந்து கொட்டிய பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது” என ஆர்ப்பாட்டக்கார்கள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × two =

*