;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!!

0

கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து விலக ஊவா முதலமைச்சர் முடிவு..!!

தன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை, மாகாண கல்வி அமைச்சுப் பதவியில் இருந்து தான் நீங்கப் போவதாக, சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாண முதலமைச்சரான சமார சம்பத் தஸநாயக்க, தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தன்னை அழைத்து அச்சுறுத்தியதோடு, முழந்தாழிட்டு மன்னிப்பும் கோர வைத்ததாக பதுளை மகளிர் தமிழ் பாடசாலை அதிபர் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மாணவி ஒருவரை பாடசாலையில் அனுமதிக்குமாறு, முதலமைச்சர் பணித்திருந்த நிலையில், கல்வி அதிகாரிகளின் ஆணைக்கு மட்டமே தன்னால் கட்டுப்பட முடியும் என கூறிய அந்த அதிபர், சாமர சம்பத்தின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளார்.

இந்தநிலையிலேயே, குறித்த அதிபரை முதலமைச்சர் அச்சுறுத்தியதாக தெரியவந்துள்ளது.

வறட்சியால் ஐந்து மாவட்டங்களுக்கு பாதிப்பு..!!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வறட்சியான காலநிலை காரணமாக இரண்டு இலட்சத்து 57,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்த மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரவி ஜெயரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, புத்தளம், குருநாகல், அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிலும் அதிக பாதிப்பு புத்தளம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை, குறித்த மாவட்டங்களுக்கான குடிநீர் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ரவி ஜெயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பிணை­முறி மீதான விவாதம் : கட்சித் தலை­வர்கள் கூட்டம் நாளை..!!

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான விவாதம் குறித்து தீர்­மா­னிக்க பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் நாளை 22 ஆம் திகதி கூடு­கின்­றது.

இதற்கும் மேல­தி­க­மாக எதிர்­வரும் பாரா­ளு­மன்ற வாரத்தின் போது பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை மறு சீர­மைக்கும் சட்ட மூலம் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான ஒழுக்­க­நெ­றிக்­கோவை தொடர்­பான சட்ட மூலத்தின் இறுதி விவாதம் ஆகி­யன இடம்­பெ­ற­லா­மென தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + sixteen =

*