;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!!

0

கஞ்சாவை சுற்றிவளைக்க சென்ற பொலிஸாரை சுற்றிவளைத்த யானை..!!

லுணுகம்வெகர காட்டில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டு வந்த கஞ்சா பயிர்செய்கையை சுற்றிவளைப்பதற்காகச் சென்ற பொலிஸார் யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

கடந்த 17ஆம் திகதி குறித்த சுற்றிவளைப்பை பொலிஸார் முன்னெடுத்திருந்ததுடன், நேற்று (20) அதிகாலை கஞ்சா செய்கைப் பண்ணப்படும் இடத்திற்கு அருகில் பொலிஸார் சென்ற வேளையிலேயே இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இதில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் காயமடைந்ததாகவும், இவர்களை காப்பாற்றுவதற்கு சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போன துப்பாக்கியைத் தேடி பொலிஸ் விசேட படையணி மற்றும் கதிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பொலிஸ் கீதம்..!!

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ​தமிழ் பேசும் மக்களுக்கு புரிந்துக்கொள்ளும் வகையில், பொலிஸ் கீதமானது தமிழ் மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

எமது நாட்டின் பிரபல பாடகர் கந்தப்பு ​ஜெயந்தனால் பாடப்பட்டுள்ள பொலிஸ் கீதமானது நேற்று (20) பொலிஸ்மா அதிபர் பூஜத் ஜயசுந்தரவினால் வவுனியா பொலிஸ் கேட்போர் கூடத்தில் வெளியீட்டு வைக்கப்பட்டது.

சுமார் 151 வருட கால வரலாற்றைக் கொண்ட பொலிஸ் துறையின் பொலிஸ் கீதமானது பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தவின் எண்ணக்கருவின் கீழ் உருவாகியுள்ளது.

இன்டிகோவின்” விமானசேவைகள் இலங்கையில் ஆரம்பம்..!!

இலங்கை-இந்தியாவுக்கிடையில் புதிய விமான சே​வையொன்று நேற்று (20) காலை ஆரம்பமானது.

குறைந்த செலவில் “இன்டிகோ” விமான நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த புதிய சேவையானது இந்தியாவின் சென்னை மற்றும் பெங்களூரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு நாளொன்றிட்கு 3 தடவைகள் இடம்பெறவுள்ளது.

இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் நேற்று (20) காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததுடன், இதனை வரவேற்கும் நிகழ்வுகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய சேவையின் இலங்கைப் பிரதிநிதிகளாக ஹேமாஸ் நிறுவனம் இணைந்துள்ளது.

குடு சுத்தாவின் சகோதரர்கள், மருமகளான சிறுமியும் கைது..!!

பொலன்னறுவை மாவட்ட போதைப் பொருள் விஷேட சுற்றிவளைப்புப் பிரிவினர் இன்று மேற்கொண்ட நடவடிக்கைகளில், குடு சுத்தா எனப்படும் நபரின் சகோதரர் உள்ளிட்ட மூவர் ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, குடு சுத்தா எனப்படும் நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், இன்று கைதானவர்கள், அவரது சகோதரர், சகோதரி மற்றும் அவரது (சகோதரியின்) 15 வயதான மகளுமே என தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த குடும்பத்திலுள்ள அனைவரும் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்புடையவர்கள் என அப் பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*