;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.01.2018)

0


பொதுஜன பெரமுன வேட்பாளர் சுவரொட்டிகளுடன் கைது

நவத்தேகம பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பாக போட்டியுடும் வேட்பாளர் ஒருவர் 58 சுவரொட்டிகளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு நவத்தேகம, காமினிபுர பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காமினுபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சர்வதேச நீதிபதிகள் மீது நம்பிக்கையில்லை .!

உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை. சர்வதேச நீதிபதிகள் பக்கச்சார்பாகவும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அமையவுமே செயற்படுவர். இது இலங்கைக்கு சாதகமாக அமையாது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எமது சார்பில் இந்தக் காரணிகளை நாம் உறுதியாக முன்வைக்க முடியும்.

எமது நீதிமன்றம் மீதான சுயாதீனத்தை சுட்டிக்காட்டி உறுதியான விவாதத்தை முன்னெடுக்க முடியும். அதனை அரசாங்கமாக நாம் முன்னெடுப்போம். நேரடியாக எமது காரணிகளை நாம் தெரிவிப்போம்.

அத்துடன் இன்று நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். நல்லிணக்க செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஆகவே இவை அனைத்துமே எமக்கு சாதகமாக அமைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பதுளை பாடசாலை அதிபர் பிரதமர் முன்னிலையில் விளக்கம்

பதுளை பாடசாலையின் பெண் அதிபர் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார்.

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரை மண்டியிடச் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை இடம்பெறவுள்ளது.

இன்று நண்பகல் ஒரு மணியளவில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இதன்போது ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல, ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ரத்னாயக்க மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோரும் பாராளுமன்ற கட்டடத்தொகுதிக்கு விசாரணைக்கு வருமாறு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் ஊவா மாகாண முதலமைச்சர் இன்று சட்டத்தரணிகளுடன் பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வார இறு­தியில் 98 இந்­திய மீன­வர்கள் விடு­விப்பு.!

எல்லை மீறி மீன்­பிடித் தொழிலில் ஈடு­பட்டு வந்த குற்­றச்­சாட்டின் பேரில் கடந்த வருட இறு­தியில் சிறைப்­பி­டிக்­கப்­பட்ட 98 இந்­திய மீன­வர்­களை இந்த வார இறு­தியில் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இவர்கள் உள்­ளிட்ட 113 பேர் இது வரையில் இலங்கை சிறையில் இருப்­ப­தாக கடற்­றொழில் மற்றும் நீரியல் வள திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

எல்லை மீறி மீன் பிடித்­தொ­ழிலில் ஈடு­பட்டு வந்த குற்­றச்­சாட்டின் பேரில் இது­வ­ரையில் 113 இந்­திய மீன­வர்கள் இலங்கை சிறையில் உள்­ளனர். அவர்­களில் 98 பேர் இவ்­வார இறு­தியில் விடு­தலை செய்­யப்­பட சட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.

இவர்கள் அனை­வரும் காங்­கே­சன்­துறை, யாழ்ப்­பாணம் மற்றும் பருத்­தித்­துறையை அண்­மித்த கடற்­ப­ரப்பில் எல்லை மீறி மீன்­பி­டியில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

மேலும் இம்­மாத தொடக்­கத்தில் 69 பேர் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன், இன்னும் 16 பேர் இக்­குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டோர் சிறைச்சாலைகளில் உள்ளனர்.

விவாதத் திகதியை தீர்மானிக்க கட்சி தலைவர் கூட்டம் நாளை கூடுகின்றது. !

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறிக்கை எப்போது விவாதத்திற்கு எடுக்கப்படும் என்பதை ஆராய மீண்டும் நாளை கட்சி தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றத்தில் கூடுகின்றது. அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இறுவெட்டின் மூலம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு ஊழல் விவகாரம் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்த அறிக்கை பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள போதிலும் அறிக்கை குறித்து இன்னும் விவாதத்திற்கு எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் மத்திய வங்கி பிணைமுறி அறிக்கை குறித்த விவாதம் எப்போது நடத்தபடுவது என்ற உறுதியான திகதியொன்றை தீர்மானிக்கும் வகையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளை கூடவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் கூடும் இந்தக் கூட்டத்தில் தேர்தலின் பின்னர் விவாதிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + 5 =

*