;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.01.2018)

0

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்கள் கடமையில்..!!

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு தெரிவிக்கின்றது.

எதிர்வரும் 10 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

செல்லுபடியான அடையாள அட்டை இல்லாதவர்கள் வாக்களிக்க முடியாது..!!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் வாக்கெடுப்பின் போது செல்லுபடியான அடையாள அட்டை இல்லாத எவரையும் வாக்களிக்க அனுமதிப்பதில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய கூறியுள்ளார்.

அடையாளத்தை வௌிப்படுத்தும் செல்லுபடியான அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிடம் இருந்து அடையாள உறுதிப்பத்திரம் ஒன்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையை வந்தடைந்தார் இந்தோனேஷிய ஜனாதிபதி..!!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பையேற்று இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கை வந்துள்ளார்.

ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான்..!!

ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சராக ஊவா மாகாண சபை உறுப்பினர் செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

பதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தையடுத்து ஊவா மாகாண கல்வியமைச்சர் பதவியில் இருந்து ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் இராஜினாமா செய்திருந்தார்.

இதனையடுத்து அந்த மாகாணத்திற்கான தமிழ் கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*