;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (24.01.2018)

0

ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் சம்பந்தமாக பெப்ரவரியில் முழுநாள் விவாதம்..!!

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஆகியன சம்பந்தமாக முழுநாள் விவாதம் ஒன்றை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில் இந்த அறிக்கைகள் சம்பந்தமாக பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சய்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடை..!!

சய்டம் எதிர்ப்பாளர்களால் நாளை கொழும்பில் நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நுகேகொட நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு கேட்டை நீதவான் நீதிமன்றம் ஆகியன இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை நடத்தப்பட இருந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு நகரத்திற்குள் நுழைவரதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்த உதரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

15 ஆயிரம் குடும்பங்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில்..!!

யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேறிய மக்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் காணி அற்றவர்களாக பதிவாகி இருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.

கடந்த 07 வருடங்களாக இவர்கள் இன்னும் இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் நிதியுதவியுடன் உடுவில் பிரதேச செயலகத்தால் அமைக்கப்பட்ட 30 மாதிரிக் கிராம வீட்டுத்திட்டத்தை, மிகவும் பின்தங்கிய காணி அற்ற நிலையில் உள்ள யனாளிக்கு கையளிக்கும் நிகழ்வு யாழ் புன்னாலைக்கட்டுவான் கிழக்கு பிரதேசத்தில் நேற்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை கையளித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாகவது,

கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த திரு கந்தையா மற்றும் இராசையா சரஸ்வதி ஆகியோரின் ஞாபகர்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட காணியில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இவ் வீட்டுத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கு தலா ஒன்பது இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ் முரளிதரன் மற்றும் அரசாங்க அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ரவியின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!!

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கை சபாநாயகர் கரு ஜயசூரியவால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் விஷேட உரையொன்றை நிகழ்த்துவதற்காக முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சபாநாயகரிடம் அனுமதி கோரியிருந்தார்.

பிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சம்பந்தமாகவே அவர் விஷேட உரை நிகழ்த்துவதற்காக அனுமதி கோரியிருந்தார்.

குற்றம் இழைத்தவர்களை தண்டிப்பதற்கு தான் பொறுப்பு..!!

ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதற்கு ஜனாதிபதி என்ற ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் தான் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டது போன்று அது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் தனிப்பட்ட ரீதியில் தலையீடு செய்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புறக்கோட்டை ஐக்கிய வியாபாரிகள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி அறிக்கையின் பக்கங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

விசாரணைக்கு தேவையான ஆவணங்கள்​ தொடர்பான சட்ட ரீதியான நடவடிக்கைகள் இயன்றளவு நிறைவடையும் வரை அவை தொடர்பான இரகசியத் தன்மை பேணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 − 9 =

*