;
Athirady Tamil News

“பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (26.01.2018)

0

வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் அபாயம்

மண்ணெண்னை மொத்த விற்பனைக்கு கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் கட்டுப்பாடு விதிதத்தன் காரணமாக வெதுப்பக உற்பத்திக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்கள் மண்ணெண்ணையை பயன்படுத்தியே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தநிலையில், இதற்கு உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் வெதுப்பக உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் பல்கலையின் வவுனியா வளாகத்திலும் மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இரு மாணவர்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.நேற்றிரவு வவுனியா வளாகத்தின் மாணவர்கள் விடுதியில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை அண்மையில் யாழ் பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது மாணவர்கள் மூவர் காயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மைத்திரியின் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இதுவரை தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என்றாலும் , தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெறும் பேச்சுவார்த்தையொன்றில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­காரம் : தொலை­பேசி அழைப்­புகள் பகுப்­பாய்வு

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்பில் தொலை­பேசி அழைப்­புக்­களை பகுப்­பாய்வு செய்யும் நட­வ­டி­கைகள் தற்­போது இடம்­பெற்று வரு­வ­தாக குற்றப் புல­னா­ய்வுப் பிரிவு நேற்று நீதி­மன்­றத்­துக்கு அறி­வித்­தது. கடத்தல், கப்பம் கோரல் தொடர்பில் இதன்­போது பல தக­வல்­களை அம்­ப­லப்­ப­டுத்தி வரு­வ­தா­கவும் அது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதிவான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு அறி­வித்தார்.

அதன்­படி இந்த விவ­கா­ரத்தில் இது­வரை கைது செய்­யப்­பட்ட 9 பேரில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள காமினி, மெண்டிஸ் ஆகிய இரு முன்னாள் கடற்­படை புல­னாய்­வா­ளர்­க­ளையும் எதிர்­வரும் எட்டாம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இதன்­போது மன்­றுக்கு விசா­ர­ணை­களை தெளி­வு­ப­டுத்­திய பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, விசா­ர­ணை­களை மிக விரைவில் நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தா­கவும், தற்­போது கடத்தல், கப்பம் கோரியோர் தொடர்பில் மேலும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்த அடை­யாளம் காணப்­பட்ட தொலை­பேசி இலக்­கங்­களை மையப்­ப­டுத்­திய விசேட பகுப்­பாய்­வுகள் இடம்­பெ­று­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

கடற்­படை புல­னா­ய்வுப் பிரிவின் முன்னாள் வீர­ரான கஸ்தூரிகே காமினி, அருண துஷார மெண்டிஸ் ஆகியோரின் விளக்கமறியலை நீடித்த நீதிவான் வழ க்கை எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

3வது தடவையாக மஹிந்த ராஜபக் ஷவை தோற்கடிப்போம்.

இலங்கை மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஆரம்பகட்ட நட­வ­டிக்­கை­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே ஆரம்­பித்தார். எனினும் தற்போது அவர் மீது போலி­யான குற்­றச்­சாட்­டு­க்களை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான குழு­வினர் சுமத்தி வரு­கின்­றனர்.

இதன்­படி உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் ஊடாக மூன்­றா­வது தட­வை­யாக மஹிந்த ராஜ­ப­க்ஷவை தோற்­க­டித்து அவ­ருக்கு பதி­ல­ளிப்போம் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பாக விசா­ரணை செய்­வ­தற்கு ஆணைக்­குழு அமைப்­ப­தற்கு ஜனா­தி­ப­திக்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒத்­து­ழைப்பு வழங்­கினார். இதன்­பி­ர­கா­ரமே அவர் ஆணைக்­கு­ழுவின் முன் சாட்­சி­ய­ம­ளித்தார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

சம­கால அர­சியல் நில­வரம் தொடர்பில் கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்கை மத்­திய வங்கி மோசடி தொடர்பில் குற்­றச்­சாட்டு எழுந்த போது அதனை உரிய முறையில் விசா­ரணை செய்­வ­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிட்­டி­பன தலை­மை­யி­லான குழு­வொன்றை அமைத்தார். அந்த குழுவின் அறிக்­கையை அடிப்­ப­டை­யாக கொண்டு பாரா­ளு­மன்­றத்தில் விவா­த­மொன்­றையும் பெற்­றுக்­கொ­டுத்தார்.

அதன்­பின்னர் பொதுத் தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் தனக்கு சாத­க­மான ஒரு­வரை நிய­மிக்­காமல் கோப்­கு­ழு­விற்கு மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்­தியை தலை­வ­ராக நிய­மித்து இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஒழுங்கு முறை­யுடன் நடந்து கொண்டார்.

கோப் குழுவின் அறக்கை கிடைக்க பெற்ற பின்னர் அதனை உட­ன­டி­யாக சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி மோச­டிக்­கா­ரர்­க­ளுக்கு உரிய நட­வ­டிக்கை எடுக்­கவும் பிர­தமர் முன்­னின்று செயற்­பட்டார். இந்த மோசடி தொடர்பில் எடுக்க வேண்­டிய சட்ட நட­வ­டிக்கை குறித்தும் தண்­டனை குறித்தும் பிர­தமர் கேட்­ட­றிந்தார்.

அதன்­பின்னர் குறித்த மோசடி தொடர்­பாக மேலும் விசா­ரணை செய்­வ­தற்கு வழங்கி ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு பூரண ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்­கினார். இதன்­பி­ர­கா­ரமே குறித்து ஆணைக்­குழு முன் சென்று சாட்­சி­ய­ம­ளித்தார். இதன் ஊடாக தான் ஒழுக்­கத்­து­டனும் நேர்­மை­யு­ட­னும கூடிய அர­சி­யல்­வாதி என்­ப­தனை மீண்டும் நாட்­டுக்கு நிரூ­பித்தார்.

தற்­போது ஒரு சில அர­சி­யல்­வா­திகள் இந்த மோச­டியை மைய­மாக வைத்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு சேறு பூசும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். தற்­போது அதுவே அவர்களுக்கு பாரமாகியுள்ளது.

இந்த மோசடியை அடிப்படையாக கொண்டு மக்களின் கவனத்தை கூட்டு எதிர்க்கட்சியினர் திசைத்திருப்ப பார்கின்றனர். இதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூன்றாவது தடவையாக மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து அவருக்கு பதிலளிப்போம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சவால்.

மோசடிக்காரர்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். எனவே நான் பெரிய வீரர்களுக்கு சவால் ஒன்றை விடுக்கின்றேன். முடியுமானால் தேர்தலுக்கு முன்னர் இரண்டு ஜனாதிபதி அறிக்கை கள் தொடர்பாகவும் விவாதம் செய்து காண்பியுங்கள். அப்போது யார் மனிதர்கள் என்பது நன்றாக விளங்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்தார்.

அத்துடன் தற்போது பிரதான கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களை என்னுடன் ஊழல் மோசடி தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அழைகின்றேன். இதன்போது யார் மோசடிக்கார்கள் என்பதனை நாட்டுக்கு நான் தெளிவுப்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று பாணந்துறையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடந்த போது முன்னாள் ஜனாதிபதியும் எனது நண்பருமான மஹிந்த ராஜபக்ஷ வாக்களிக்கவில்லை என நான் தெரிவித்த கருத்துக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.

ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்புக்கு எடுக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார். அது முற்றிலும் தவறாகும். ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடந்த போது மஹிந்த ராஜபக்ஷ வாக்களிக்கவில்லை. இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஹன்சாட் அறிக்கையை மையமாக வைத்தே நான் இதனை கூறினேன். நான் குறித்த ஹன்சாட் அறிக்கையையும் கொண்டு வந்தேன்.

அத்துடன் நேற்று முன் தினம் பாராளுமன்றத்தில் ஆச்சரியமான சம்பவம் நடந்தது. அதாவது மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை தேர்தலின் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம் என கட்சி தலைவர்கள் பாராளுமன்றத்தில் தீர்மானம் எடுத்துள்ளனர்.

இதன்மூலம் மோசடிக்கார பிரபுக்கள் அனைவரும் தற்போது கூட்டிணைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்னர் இதனை விவாதத்திற்கு எடுத்திருந்தால் இரு தரப்பினரின் ஆடைகளும் விலகிப் போயிருக்கும். அதனால்தான் விவாதத்திற்கு எடுக்கவில்லை.

அத்துடன் பாராளுமன்றத்தில் கூடுவதற்கு முன்னர் மோசடிக்கார பிரபுக்கள் அனைவரும் பொரளையில் ஒன்று கூடியுள்ளனர். இந்த மோசடிக்கார பிரபுக்கள் அனைவரும் ஒரு குழுவினர்கள் தான். கூட்டிணைந்து தேர்தலுக்கு முன்னர் இந்த இரு அறிக்கைகளை விவாதத்திற்கு எடுத்தால் சிக்காலாகும் என்று கருதி தேர்தலுக்கு பின்னர் விவாதத்திற்கு எடுப்போம் என தீர்மானித்தனர்.

நான் பெரிய வீரர்களுக்கு சவால் விடுகின்றேன்.முடியுமானால் பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னர் இந்த இரு அறிக்கைகளையும் ஒருநாளில் விவாதம் செய்து காண்பியுங்கள். அப்போது யார் மனிதர்கள் என்பது நன்றாக விளங்கும். தற்போது பிரதான கட்சிகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ள கட்சிகளின் தலைவர்களை என்னுடன் ஊழல் மோசடி தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு அழைகின்றேன். இதன்போது யார் மோசடிக்கார்கள் என்பதனை நாட்டு தெளிவுப்படுத்துவேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × four =

*