;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (27.01.2018)

0

காலி வீதி தற்காலிகமாக மூடப்படும்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தின விழா ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சுதந்திர தின முன்னேற்பாடுகள் மற்றும் சுதந்திர தின நிகழ்வுகள் தொடர்பான பயிற்சிகளுக்காக இன்று (27) முதல் 30 ஆம் திகதி வரையும் மேலும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியும் காலி வீதியில் செரமிக் சந்தியில் இருந்து காலிமுகத்திடல் சுற்றுவட்டம் வரையான வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை குறித்த வீதி இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்­தகம் எழு­த­வுள்ளார் ஜனா­தி­பதி

நான் எழுதும் புத்­த­கத்தில் கடந்த அர­சாங்க காலத்­திலும் இன்­றைய அர­சாங்க காலத்­திலும் நான் செய்த பணிகள் தொடர்பில் குறிப்­பி­டுவேன். இரு அர­சாங்­கங்­க­ளிலும் எனக்கு கிடைத்த ஒத்­து­ழைப்­புக்கள், எதிர்ப்­புக்கள் உட்­பட பல விட­யங்­க­ளையும் நான் எனது புத்­த­கத்தில் குறிப்­பி­டுவேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நான் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட போது மக்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்ற நட­வ­டிக்கை எடுப்­ப­தாக கூறி­யி­ருந்தேன்.

எனவே அந்த எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நான் எடுப்பேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மாளி­கையில் நேற்று ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னிகள் மற்றும் ஆசிரியர்களுடனான சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இ.தொ.கா.வின் வேட்பாளர் உட்பட 5 பேருக்கு பிணை

பதுளை மாநகர சபைக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் நடேசன் வெள்ளக்கண்ணன் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சபை உறுப்­பி­னர்­க­ளான ஆறு­முகம் கணே­ச­மூர்த்தி மற்றும் உபாலி சேனா­ரட்ண ஆகியோர் நேற்று முன்­தினம் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்­தனர்.

இந்த சம்­பவம் தொடர்­பாக பதுளை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களை அடுத்து நீதி­மன்றில் நீதிவான் சுஜீ­வ­ன­த­சில்வா முன்­னி­லையில் விளக்­க­ம­ளித்­தனர். இதன்­போது அன்­றைய சம்­ப­வத்தில் காய­ம­டைந்­த­தா­கக்­கூறி, ஐக்­கி­ய­ மக்கள் சுதந்­தி­ர­முன்­னணி யில் பதுளை மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் போட்­டி­யிடும் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் வேட்பாளர் நடேசன் வெள்ளக்­கண்ணன் உட்­ப­ட­ ஐவர் பதுளை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக நீதி­மன்றில் பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை அடுத்து நீதி­பதி பதுளை பொது வைத்­தி­ய­சா­லைக்குச் சென்று அறு­வரையும் பார்­வை­யிட தீர்­மா­னித்தார். அதன் பின் நேற்­று­மாலை மீண்டும் குறித்­த­ ம­னு­வி­சா­ர­ணைக்கு எடுக்­கப்­பட்­டது.

இதன்போது ஐவ­ரையும் தலா ­பத்­தா­யிரம் ரூபா ரொக்கப் பிணை­யிலும் ஒரு இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான சரீ­ரப்­பி­ணை­யிலும் விடு­விக்­கு­மாறு உத்­த­ர­விட்­ட­துடன் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திக­திக்கு வழக்கை ஒத்­தி­வைத்தார்.

இந்த சம்­பவம் தொடர்­பாக 314/ 316தண்­டனைக் கோவை­சட்­டத்தின் கீழ் பது­ளை­பொ­லிஸார் நீதி­மன்றில் விளக்­க­ம­ளிக்­கை யில், சம்­பவத் தினத்­தன்று ஊவா­மா­காண சபை எதிர்க்­கட்சித் தலைவர் ர.மு.ரத்­னா­யக்­க­மற்றும் ஆறு­முகம் கணே­ச­மூர்த்தி, உபா­லி­ சே­னா­ரட்ன ஆகியோர் ஊவா­ மா­காண சபை நுழை­வா­யினுள் ஜீப் வண்­டியில் வந்­து­கொண்­டிருந்­த­வே­ளையில் அங்கு வந்­தி­ருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் திடீரென குறித்த மாகாண சபை உறுப்பினர்களை தாக்கியதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மன்றில் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − two =

*