;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (27.01.2018)

0

ஐ.தே.க.விடம் அதிகாரம் இருப்பதால் கிராமங்களை எங்களிடம் தாருங்கள்

ஆளும் கட்சி என்ற வகையில் அதி­காரம் எம்­மி­டமே உள்­ளது. ஆகவே கிரா­மத்தின் ஆட்­சியை ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கு­வதே ஏற்­ற­மா­னது. ஆகவே, அதி­கா­ரத்தை எமக்கு வழங்க வேண்டும் .அதன் போது நாட்டை கட்­டி­யெ­ழுப்பும் பொறுப்பை நாம் ஏற்போம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

‍மொன­ரா­கலை முதல் பதுளை வரை­யான நக­ரங்­களின் அபி­வி­ருத்­திக்கு நாம் விசேட திட்­டங்­களை வகுத்­துள்ளோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பதுளை நகரில் நேற்று நடை­பெற்ற பிர­சாரக் கூட்­டத்தில் கலந்துக் கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில் ,

கடன் செலுத்திக் கொண்டு அர­சாங்­கத்தை முன்‍­னுக்கு கொண்டு செல்­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பயந்தார். இத­னை­ய­டுத்து ஊவா மாகாண சபை தேர்­தலின் முடி­வினை கண்­ட­வுடன் அவர் மேலும் அச்சம் கொள்ள தொடங்­கினார். இதன்­போதே தேர்­தலை நடத்­தினார். இந்த தேர்­தல்­களில் நாம் வெற்றி பெற்றோம் .ஆகையால் ஊவா மக்­களை நாம் என்றும் மறக்க மாட்டோம் . மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சியின் போது நாட்­டுக்கு செய்­த­வற்றை புரிந்து கொண்டு நாம் ஆட்­சியை பொறுப்­பேற்றோம் .

முன்­னைய ஆட்­சியின் போது நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீதி அபி­வி­ருத்­தி­க­ளுக்கு மஹிந்த ராஜ­பக்ஷ கட­னுக்கு மேல் கடன் பெற்றார் .அந்த கடன்­தொ­கையை செலுத்த முடி­யாத கார­ணத்­தினால் ஆட்சி அதி­கா­ரத்தை அவ­ருக்கு கைவிட நேர்ந்­தது .எனினும் அந்த கடனை செலுத்­து­வ­தற்கு போதி­ய­ளவு நிதி நாட்டில் இருக்­க­வில்லை. இதன்­போது நாட்டின் வரு­மா­னத்தை அதி­க­ரித்து செல­வினை குறைத்து கடன் பெறு­வ­தனை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்தோம் . இதன்­படி 2016 முதல் 2017 ஆம் ஆண்­டு­களில் கடன் செலுத்தும் பலத்தை நாம் ஏற்­ப­டுத்திக் கொண்டோம் . இதன்­படி புதிய பொரு­ளா­தார கொள்­கையை நாம் நாட்­டுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தினோம். இந்த கொள்­கைக்கு சர்­வ­தேச நாணய நிதியம் ஒப்­புக்­கொண்­டது . இந்த வேலைத்­திட்­டத்தை முன்­னுக்கு கொண்டு செல்­வ­தற்­கான பலம் எமக்கு கிடைத்­துள்­ளது.

வரு­மானம் இல்­லை­யென்றால் நாட்டின் அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுக்க முடி­யாது . இதன்­படி இரு வரு­டத்தில் நாட்டின் அபி­வி­ருத்­தியை கட்­டி­யெ­ழுப்­பினோம். இதன்­படி பதுளை, பண்­டா­ர­வளை ,மொன­ரா­கலை , வெல்­ல­வாய ஆகிய நக­ரங்­களின் அபி­வி­ருத்­திக்கு எம்­மிடம் விசேட திட்டம் உள்­ளது .அம்­பாந்­தோட்டை அபி­வி­ருத்தி முன்­னேற்­றத்தை மொன­ரா­கலை முதல் பதுளை வரை விரி­வு­ப­டுத்­துவோம் . பல்­வேறு வகை­யான தொழிற்­சா­லை­களை நிறுவி தொழில் வாய்ப்­பு­களை நாம் தோற்­று­விப்போம் .

நாம் கல்வி தகை­மைக்கு ஏற்ற தொழில்­வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம் . இளை­ஞர்­க­ளுக்கு தொழில்­வாய்­பப்­களை ஏற்­ப­டுத்த ஹோட்டல் மற்றும் தொழிற்­சா­லை­களை உரு­வாக்க வேண்டும் .

அத்­துடன் முன்­னைய ஆட்­சியின் போது அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை நிர்­மா­ணிக்க 1.3 பில்­லயின் டொலர் செல­வி­டப்­பட்­டது. இதற்­காக கடன் பெறப்­பட்­டது .எனினும் தற்­போது அதனை மாற்றி குத்­தகை அடிப்­ப­டையில் துறை­மு­கத்தை சீனா­வுக்கு வழங்­கி­யுள்ளோம் . தற்­போது ஒர­ளவு கடன் சுமையை நாம் குறைத்­துள்ளோம்.

எல்ல பகு­தியை மைய­மாக வைத்து பாரிய சுற்­றுலா வல­ய­மொன்றை உரு­வாக்­க­வுள்ளோம் . எனவே நாட்டின் அபி­வி­ருத்­திக்கு முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு கிரா­மத்தின் அதி­கா­ரத்தை ஐக்­கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டும் . ஆளும் கடசி என்ற வகையில் அதிகாரம் எம்மிடமே உள்ளது .ஆகவே கிராமத்தின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதே ஏற்றமானது. ஆகவே அதிகாரத்தை எமக்கு வழங்க வேண்டும் . அதன் போது நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நாம் ஏற்போம் என்றார்.

“ தாஜுடீன், லசந்த, மகேஸ்­வரன் கொலை விசா­ர­ணை­களை துரி­தப்­ப­டுத்­துங்கள்”

வஸீம் தாஜுடீன், லசந்த விக்­ர­ம­துங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்­வரன் ஆகி­யோர்­களின் கொலை விசா­ரணை நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்தி அதன் உண்மை நிலை நாட்­டுக்குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுப்­பா­ராயின் மக்கள் அவரை மற்­று­மொரு தடவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வார்கள் என அமைச்சர் பி. ஹெரிசன் தெரி­வித்­தார்.

பொல­ந­றுவை,ஹிங்­கு­ரான்­கொ­டயில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேர்தல் பிர­சா­ரக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்பில் ஜனா­தி­பதி அடிக்­கடி கருத்து தெரி­வித்து வரு­கிறார். அந்­ந­ட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அவர் பிர­த­ம­ரி­டமும் அனு­மதி கோரி­யுள்ளார். எனவே தவறு செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­பதில் எவ்­விதப் பிரச்­சி­னையும் இல்லை. அதனை ஐக்­கிய தேசியக் கட்சி வர­வேற்­கி­றது.

ஊழல் மோச­டி­க­ளுக்கு எதி­ரான கொள்­கையில் ஐக்­கிய தேசியக் கட்சி என்றும் உறு­தி­யாக உள்­ளது. அது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எடுக்கும் சகல நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாம் ஒத்­து­ழைப்பு வழங்­குவோம். மேலும் தற்­போது பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்கை வெளி­யா­கின்ற சந்­தர்ப்­பத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் அவ­ரது தரப்­பி­னரும் மண்­ணெண்ணெய் பட்ட சாரைப்­பாம்­புபோல் தவிக்­கின்­றனர். அவர்கள் செய்த பிழைகள் வெளி­வ­ர­வுள்­ள­த­னா­லேயே இவ்­வாறு திண­று­கின்­றனர்.

மேலும் கடந்த காலங்­களில் மேற்­கொள்­ளப்­பட்ட ஹெஜின் உடன்­ப­டிக்கை,மிக் விமான உடன்­ப­டிக்கை என்­ப­வற்­றுக்கும் ஆணைக்­குழு அமைத்து விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ காலத்தில் வெளி­நாட்டு வங்­கி­களில் பணம் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருப்பின் அவற்­றையும் நாட்­டுக்கு கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

அத்­துடன் வஸீம் தாஜுடீன், லசந்த விக்­ர­ம­துங்க, முன்னாள் அமைச்சர் மகேஸ்­வரன் ஆகி­யோர்­களின் கொலை விசா­ரணை நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட்டு அதன் உண்மை நிலை நாட்­டுக்குப் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னெ­டுப்­பா­ராயின் மக்கள் அவரை மற்­று­மொரு தடவை நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு முன்­னிற்­பார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத சேவை இடைநிறுத்தம்

பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் இரண்டு மாத காலத்திற்கு மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான புகையிரத போக்குவரத்தை தற்காலிகமாக இடைநிறுத்தப் போவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மதவாச்சி மற்றும் தலைமன்னார் வரையான புகையிரத மார்க்கத்தில் இருக்கின்ற பாலத்தின் புனர்நிர்மாணப் பணி காரணமாக இவ்வாறு புகையிரத போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என்று அந்த திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க கூறினார்.

இதேவேளை மாத்தறை – கதிர்காமம் இடையிலான புகையிரத மார்க்கத்தின் பெலியத்தை வரையான பகுதி இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

எதிர்வரும் மே மாாதமளவில் மாத்தறையில் இருந்து கெகனதுரை வரையான புகையிரத பாதையை திறக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அந்த திணைக்களம் கூறியுள்ளது.

சீனாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படுகின்ற மாத்தறை – கதிர்காமம் இடையிலான புகையிரத மார்க்கத்திற்காக 278.4 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படுகிறது.

இலங்கையின் மிக நீளமான சுரங்கப் பாதை மற்றும் மிக நீளமாக புகையிரத பாலம் ஆகியன இந்த புகையிரத மார்க்கத்தில் நிர்மாணிக்கப்பட உள்ளமை கூறத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 2 =

*