;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (28.01.2018)

0

புதையல் தோண்டிய 12 பேர் கைது.

வாரியபொல மற்றும் உடுதும்பர பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் புதையல் தோண்டிய 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வீடு திரும்பினார் ரோஸி

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் ரோஸி சேனாநாயக்க கால் உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்டு சிகிச்சைகளை முடித்துக்கொண்டு இன்றைய தினம் வெளியாகியுள்ளார்.

இதன்போது கூட்டங்களை குறைத்துக்கொண்டு சற்று இளைப்பாருமாறு அவருக்கு வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இது தொடர்பில் அவரது ஊடக தொடர்பாளரிடம் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளர் ரோஸி சேனாநாயக்க நேற்று கூட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர் கால் உபாதையின் காரணமாக அவசரமாக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். இதன்போது பொது கூட்டங்களில் கலந்துக்கொள்வதனை குறைத்துக் கொண்டு சற்று இளைப்பாறுமாறு வைத்தியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் இன்றைய தினம் ரோஸி சேனாநாயக்க சிகிச்சைகளை முடித்துக்கொண்டு வைத்தியசாலையில் இருந்து வெளியாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஓர் முக்கிய செய்தி.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்­ப­வர்­க­ளுக்கு அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சினால் நாளை முதல் பெப்­ர­வரி 22 ஆம் திக­தி­வரை பொது மன்­னிப்பு காலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, குவைத் அர­சாங்­கத்­தினால் 2018 ஜன­வரி 29ஆம் திக­தி­முதல் எதிர்­வரும் பெப்­ர­வரி 22ஆம் திக­தி­வரை விசா சட்­டத்தை மீறிய நபர்­க­ளுக்­காக பொது மன்­னிப்பு காலத்தை அந்­நாட்டு உள்­வி­வ­கார அமைச்­சு அறி­வித்துள்­ளது.

இந்த பொது மன்­னிப்பு காலத்தில் சட்­ட­ குவைத்தில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் குறித்த இந்த காலப்­ப­கு­தியில் அதற்­கு­ரிய தண்­டப்­பணம் செலுத்­தாமல், குறிப்­பிட்ட நிறு­வ­னத்தில் இருந்து விசேட அனு­ம­தியை பெற்­றுக்­கொள்­ளாமல் அந்­நாட்டில் இருந்து வெளி­யேற முடியும்.

இவ்­வாறு குவைத்தில் இருந்து வெளி­யே­று­வோ­ருக்கு சட்­ட­ரீ­தி­யி­லாக மீண்டும் குவைத் அந்­நாட்­டுக்கு செல்­வ­தற்கு (வேறு சட்ட ரீதி­யி­லான தடைகள் இல்­லா­விட்டால்) அனு­மதி வழங்கப்­ப­டு­கின்­றது. மேலும் இந்த மன்­னிப்பு காலப்­ப­கு­தியில் தங்­களால் செலுத்­த­வேண்­டிய குறித்த தண்­டப்­பணம் அனைத்­தையும் செலுத்தி, அனு­ம­திக்­கப்­பட்ட விசா பத்­திரம் ஒன்றை பெற்­றுக்­கொண்டு தொடர்ந்து குவைத்தில் தங்­கி­யி­ருப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் பிர­யா­ணத்­தடை அல்­லது நீதி­மன்ற தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு பொது மன்­னிப்பு காலம் பொருந்­தாது. அவ்­வாறு சட்ட பிரச்­சி­னைகள் இருப்­ப­வர்கள் அருகில் இருக்கும் வதி­விட விவ­கார திணைக்­க­ளத்­திற்கு சென்று தங்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்­துக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அத்­துடன் குறித்த மன்­னிப்பு காலத்தில் குவைத்தில் இருந்து வெளி­யே­று­வ­தற்கு அனு­ம­தி­வ­ழங்­கப்­பட்­டி­ருந்தும் தொடர்ந்தும் அங்கு தங்கி இருப்­ப­வர்க ளை கைது­செய்து வெளி­யேற்­று­வ­தற்கு அந்­நாட்டு அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளனர்.

இதே­வேளை, குவைத் நாட்டில் சுமார் 15 ஆயிரம் இலங்­கை­யர்கள் சட்ட பூர்­ வ­மான விசா இல்­லாமல் தங்கி இருக்­கின்­றனர். இவ்­வாறு அங்கு தங்கியிருப்பவர்களை அவர்களின் உறவினர்கள் இது தொடர்பாக அறிவுறுத்தி பொது மன்னிப்பு காலத்தில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனா­தி­பதி – கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் நாளை

மத்­தி­ய­வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் நடை­பெ­ற­வுள்ள விவாதம் தொடர்­பாக பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு நாளை 29ஆம் திகதி திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கட்­சித்­த­லை­வர்­களின் கூட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நாளை காலை 10.00 மணிக்கு கட்­சித்­த­லை­வர்­களின் விசேட கூட்டம் நடை­பெறும்.

பிணை­முறி அறிக்கை மீதான விவா­தத்தை பெப்­ர­வரி மாதம் 20, 21ஆம் திக­தி­களில் நடத்த ஏற்­க­னவே நடை­பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்­ளூ­ராட்சி உறுப்­பி­னர்­க­ளுக்­கான செலவு எவ்வளவு தெரியுமா.?

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­சபைத் தேர்­தலில், தேர்ந்­தெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்ள கொடுப்­ப­ன­வுகள் மற்றும் ஏனைய செல­வு­க­ளுக்­காக 74 கோடி ­ரூபா பணம் செல­விட வேண்­டி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

வரவு – செலவுத் திட்­டத்தில் ஒதுக்­கப்­பட்­டுள்ள நிதிக்கு மேல­தி­க­மா­கவே இந்த பெருந்­தொகை நிதி தேவைப்­ப­டு­வ­தா­கவும் உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

இம்­முறை உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்ள உறுப்­பி­னர்­களின் தொகை 4000க்கும் அதி­க­மா­கி­யுள்­ளதால் இவ்­வாறு அதி­க­ரிக்­க­வுள்ள உறுப்­பி­னர்­க­ளது கொடுப்­ப­னவு உள்­ளிட்ட ஏனைய செல­வு­க­ளுக்­கான பணத்தை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் எதிர்­வரும் இரு வாரங்­களில் அமைச்­ச­ர­வையில் பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக உள்­ளூ­ராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசல் முஸ்­தபா தெரி­வித்­துள்ளார்.

அந்­தந்த தொகு­தி­களில் கூட்­டங்­களை நடத்த கேட்­போர்­கூ­டங்­களை அவர்­களே செய்­து­கொள்ள வேண்­டி­யுள்­ள­தா­கவும் அவ்­வா­றான தேவை­யு­டைய தொகு­தி­க­ளுக்கு நிதி­யினை வழங்­க­வேண்­டி­யுள்­ள­தா­கவும் அத்­தோடு பிர­தே­ச­சபை உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு மாதாந்தம் 15ஆயிரம் ரூபாவும் நகர மற்றும் மாந­க­ர­சபை உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு மாதாந்தம் 20ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

தற்­போது நடை­பெறும் தொகுதி மற்றும் விகி­தா­சாரம் கலந்த புதிய கலப்பு முறையில் தேர்தல் நடைபெறுவதால் உறுப்பினர்களது தொகையும் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அதன் விளைவாகவே இவ்வளவு பெருந்தொகைப் பணம் செலவிட வேண்டியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + sixteen =

*