;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (30.01.2018)

0

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் 118 நாடுகளில்

இலங்கையின் 70 ஆவது தேசிய சுதந்திர தின வைபவத்தை உலகிலுள்ள 118 நாடுகளில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுரக அலுவலகங்கள் மற்றும் நாடுகளிலுள்ள இலங்கையர்களின் அமைப்புக்கள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

பிரித்தானிய அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் இலங்கையில் நடைபெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாவனைக்குதவாத பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டு அழிப்பு

மக்களின் பாவனைக்கு உதவாத 2500 கிலோ பெரிய வெங்காயம் தம்புள்ளை மாநாகர சபையின் சுகாதராப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

தம்புளை மாநகர சபையின் சுகாதார பிரிவு மேற்கொண்ட முற்றுகையின் போது தம்புளை நகர மத்தியிலுள்ள களஞ்சிய சாலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மக்களின் பாவனைக்கு உதவாத 2500 கிலோ பெரிய வெங்காயம் கைப்பற்றப்பட்டது.

தம்புளை மாநகர சபை நகர ஆணையாளர் ரூவான் ரத்நாயக்க, சுகாதார பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர் தயந்த வீரசேகர ஆகியோருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாவனைக்குதவாத பெரிய வெங்காயம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பெரிய வெங்காயம் அனைத்தும் நேற்று மண்ணெண்ணை ஊற்றி அழிக்கப்பட்டுள்ளன.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் நடந்ததென்ன ?

மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதத்திகதி இறுதி செய்யப்படாது கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இன்று 12 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது.

கூட்டத்திற்கான அறிவிப்பு பாராளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் சபாநாயகரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நண்பகல் வேளையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மத்­திய வங்கி பிணை­முறி அறிக்கை தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ‍ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் மீதான விவாதத்திகதி இறுதி செய்யப்படாது நிறைவடைந்துள்ளது.

சபை முதல்வரும் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை நடத்த முடியாதென தெரிவித்திருந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் விவாதத்தை வைக்குமாறு தெரிவித்துள்ளன.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளின் வேண்டுதல்களுக்கு தலைசாய்த்தவாறு கூட்டத்தில் பங்கேற்றுள்ளது.

இதையடுத்து, சபாநாயகர் கருஜயசூரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின்னர் விவாதம் தொடர்பான திகதியை அறிவிப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஆணைக்குழு அறிக்கைகள் மீதான விவாதம் இடம்பெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்படுமென தேர்தல் ஆணைக்கு கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குமார வெல்கமவின் மனு நிராகரிப்பு

கையூட்டல் ஆணைக்குழுவினால், தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, தம்மை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.இந்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.கடந்த ஆட்சி காலத்தில் குமார் வெல்கம போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட போது, இலங்கை போக்குவரத்து சபையில் உபதலைவர் பதவி ஒன்றை உருவாக்கி, அதில் தமது, நண்பர் ஒருவரை நியமித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் அவர் இலங்கை போக்குவரத்து சபைக்கு 33 லட்சம் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு, கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரியே, குமார் வெல்கம மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடன் பெறுவதில் அரசாங்கத்திற்கு சிக்கல்

மத்திய வங்கியின் பிணை முறி விநியோகம் காரணமாக அரசாங்கத்திற்கு கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − eight =

*