;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (30.01.2018)

0

ஜனாதிபதி நாளை காத்தான்குடி விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரிவின் பிரதித் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன நாளை புதன்கிழமை காத்தான்குடி நகருக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது, காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மைதானத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

தீர்மானமின்றி நிறைவடைந்த கட்சித் தலைவர்கள் கூட்டம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்கு முன்பாக, பிணைமுறி மோசடி சம்பந்தமான அறிக்கை தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்துவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் பாராளுமன்ற விவாதம் நடத்துவதற்குறிய திகதியை அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு முன்பாக பாராளுமன்றத்தை​ கூட்டுவது சிறந்ததென பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமையவே இன்று கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பெண்கள் இருவர் கைது

விசா நடைமுறைகளை அலட்சியம் செய்ததுடன், துஷ்பிரயோகமும் செய்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரை குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.

இத்தாலி மற்றும் ஜேர்மன் நாடுகளைச் சேர்ந்த இந்த இரண்டு பெண்களும் சுற்றுலா விசாவில் இலங்கை வந்தவர்கள். எனினும் முறையான எந்தவித அனுமதியும் பெறாமல், எல்ல பகுதியில் தாம் கொண்டுவந்திருந்த அணிகலன்கள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இது குறித்துத் தெரியவந்த குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணைகள் நிறைவுற்றதும் இருவரும் நாடு கடத்தப்படுவர் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பாழடைந்த வயல் கிணறொன்றிலிருந்தே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்டவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன்றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார்ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலஸார் தெரவித்தனர்.

பொதுமகன் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த வட்டுக்கோட்டை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*