;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (31.01.2018)

0

இன்றும் பலத்த மழை

நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி , ஊவா , மத்திய , சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் , தென் மற்றும் மேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதேவேளை , நுவரெலியா – ராகலை – ரத்நாயகபதன மற்றும் லீட்ரேவத்த பிரதேசத்தில் பெய்த கடும் மழை காரணமாக மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக , குறித்த பிரதேசத்தில் 20 குடும்பங்களை சேர்ந்த 107 பேர் வௌியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசி இறக்குமதியை நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை

பெரும்போகநெல் அறுவடை ஆரம்பித்துள்ளமையினால் அரசி இறக்குமதியை நிறுவதுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி , தற்போது சந்தையில் நிலவும் அரிசி தொகை மற்றும் மற்றைய விடயங்கள் தொடர்பில் ஆராய அமைச்சரவை குழுவொன்றும் நியமிக்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் வர்த்தகம் போன்று கிராமப்புற பொருளாதாரம் விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 8 =

*