;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.02.2018)

0

கடந்த மாதத்தில் இணையம் தொடர்பில் 260 முறைப்பாடுகள்..!!

இந்த ஆண்டின் முதலாவது மாதத்திற்குள் இணையத்துடன் தொடர்புடைய 260 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் அமைப்பு கூறியுள்ளது.

அந்த முறைப்பாடுகளில் அதிகமானவை சமூக வலைத்தளங்களுடன் சம்பந்தப்பட்டவை என்று அந்த அமைப்பின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறினார்.

சமூக வலைத்தளங்களில் வேறு நபர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

தேர்தல் காலங்களில் கூறப்படும் கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை..!!

தேர்தல் காலங்களில் தெரிவிக்கப்படுகின்ற கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.

அந்தக் கருத்துக்களின் உண்மைத் தன்மையை ​தேர்தலின் பின்னர் அறிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்து இருக்க வேண்டும் என்று திலக் மாரப்பன தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.

பிணைமுறி மோசடிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை : அஜித் பீ பெரேரா..!!

பிணைமுறி மோசடிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என திலக் மாரப்பன அறிக்கை உறுதி செய்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் கூட்டுச் சேர்ந்து தேசிய சொத்துக்களை சூறையாடிய பழைய திருடனே எமது ஆட்சியில் மீண்டும் திருடியுள்ளான் என மின்வலு சக்திவள புத்தாக்க பிரதியமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய பிணைமுறி அறிக்கையுடன் ஐக்கிய தேசிய கட்சியின் தொடர்பு குறித்து நேற்று மின்வலு சக்திவள புத்தாக்க அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவுப்படுத்துகையிலேயே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். .

அவர் மேலும் இது குறித்து தெரிவிக்கையில்,

பிணைமுறிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தொடர்பில்லை. இதனை திலக் மாரப்பன தலைமையிலான அறிக்கை உறுதி செய்துள்ளது. பழைய திருடனே எமது ஆட்சிக் காலத்திலும் மீண்டும் திருடியுள்ளான்.

2008 ஆம் ஆண்டு காலத்தில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. அக்கால அரசாங்கத்துடன் கூட்டாக செயற்பட்ட அலோஷியஸ் மகேந்திரனே திருடியுள்ளதாக பாரிய ஊழல் மோசடி மற்றும் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதனுடன் பெபர்சுவல் ட்ரெஷரிக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் தொடர்பில்லை, அலோஷியஸ் மகேந்திரன் ஐக்கிய தேசிய கட்சியினர் அல்ல. எனவே மக்கள் மனதை வென்ற எமது கட்சிக்கு சேறு பூசவே இந்த திரிபுபடுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில் இலங்கை வங்கி, இலங்கை மத்திய வங்கி மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்திலேயே மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் எங்கும் ரவி கருணாநாயக்க கொள்ளையடித்துள்ளார் என்று பதியப்படவில்லை.

இந்த அறிக்கைகள் சுதந்திரமாக நீதிக்குட்பட்டு எழுத்தப்பட்ட அறிக்கையாகும். அவ்வறிக்கையில் பலராலும் விமர்சிக்கப்படும் ஐக்கிய தேசிய கட்சியினர் திருடர்களை காப்பாற்ற நடத்தும் கோப் குழு அடிக்குறிப்புகள் குறித்தும் சிறந்த வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவை சாட்சிகளாகவும் உண்மைத் தன்மை கொண்டவை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே நாங்கள் விவாதத்திற்கு தயார். உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் இந்த பிணைமுறி தொடர்பான விவாத முடிவுகளில் இருந்து எடுக்க வேண்டுமா? இல்லையா? என்பதை பொது மக்களே தீர்மானிக்க வேண்டும்.

ஆயினும் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு வரையில் இலங்கை பிரதான கட்சிகளின் கூட்டு ஒருபோது குலையாது, அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் நாங்களே. எனவே எம்மீது வீசப்படும் சேறுகள் எமது கட்சியின் வெற்றிக்கு எதிர்வரும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவேயன்றி அதில் எதுவித உண்மைகளும் இல்லை.

கேள்வி: அலோசியஸ் மகேந்திரன் தான் திருடர் என கூறப்படுமானால் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க முடியுமா? அவர் தற்போது நாட்டில் இல்லை என்கின்றனர். பிறநாட்டவர் ஒருவரை எமது நாட்டின் சட்டங்களுக்கமைவாக கைது செய்ய இயலுமா? அது சாத்தியப்படுமா?

பதில்: ஆம், கைது செய்ய சாத்தியக்கூறுகள் உள்ளன. நாம் எமது இராஜதந்திர கொள்கைகள் மூலமும் வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் நட்புறவு நடவடிக்கைகள் மூலம் இவ்வாறு கைது நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். இதற்கு கடந்த காலங்களில் சிறந்த உதாரணங்கள் உள்ளன. எனவே உண்மையான திருடனை கைதுசெய்வோம். அதற்கு சட்டத்திலும் இடமுண்டு.

ஆறாம் திகதி விவாதம் இடம்பெற்றும் மார்ச் மாதத்தில் பிணைமுறி அறிக்கைத் தொடர்பாக நீதிதுறையினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். அதன்போது முதல் வழக்கு விசாரணைக்கு அலோஷியஸ் மகேந்திரனை முன்நிறுத்துவோம். அதனை சட்டம் நிறைவேற்றும்.

கேள்வி : மோசடி செய்யப்பட்ட தொகை மீளப்பெறப்படும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா?

பதில்: ஆம், கட்டாயம் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகளின் போது அந்த உடைமைகள் நாட்டினுள் காணப்படவில்லை என்பதனாலேயே எம்மால் அதனை மீளப்பெற முடியாமல் உள்ளது. ஆனால் இவர்களின் சொத்துக்கள் இலங்கையில் உள்ளன. அவை பறிமுதல் செய்யப்படும். வங்கி கணக்குகளும் ஆராயப்படும் என்றார்.

ஐ.தே.க. செயற்­குழு நாளை அவ­ச­ர­மாக கூடு­கின்­றது..!!

பாரா­ளு­மன்­றத்தில் 6 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள சர்ச்­சைக்­கு­ரிய இரண்டு விசா­ரணை அறிக்­கைகள் மீதான விவாதம் மற்றும் மாரப்­பன அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­ய­தா­னங்கள் குறித்து ஆராய்­வ­தற்­காக ஐக்­கிய தேசிய கட்­சியின் மத்­திய செயற்­குழு நாளை வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­மாக கூடு­கி­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கூட­வுள்ள மத்­திய செயற்­கு­ழுவில் முக்­கிய தீர்­மா­னங்கள் எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாகவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்கு முன்­ன­தாக எதிர்­வரும் ஆறாம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் சர்ச்­சைக்­கு­ரிய பாரிய ஊழல் மோசடி மற்றும் பிணை­முறி தொடர்­பான ஜனா­தி­பதி விசா­ர­ணைக்­குழு அறிக்­கைகள் இரண்டு தொடர்­பான பாரா­ளு­மன்ற விவா­தத்தில் ஐ.தே.க. எவ்­வ­கை­யான விட­யங்­களை பேசு­வது என்­பது தொடர்­பா­கவும் இதன்­போதும் கலந்­து­ரை­யா­டப்­ப­ட­வுள்­ளது.

அதன்­போது ஐ.தே.க.வின் உப தலைவர் பத­வி­யி­லுள்ள ரவி கரு­ணா­நா­யக்­கவை தற்­கா­லி­க­மாக நீக்க வேண்­டு­மென திலக் மாரப்­ப­னவின் தலை­மையின் கீழ் அமைக்­கப்­பட்ட குழு முன்­மொ­ழிந்­துள்ள நிலையில் அது தொடர்­பா­கவும் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

மேலும் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடக்­க­வி­ருக்கும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலின் போது கொழும்பு மாவட்­டத்­துக்கு பொறுப்­பா­க­வி­ருக்கும் ரவி கரு­ணா­நா­யக்­கவை ஐக்­கிய தேசிய கட்­சியின் உப­த­லைவர் பத­வி­யி­லி­ருந்து இவ்­வாறு தற்­கா­லி­க­மாக நீக்­கு­வ­தென்­பது கொழும்பு மாவட்ட உள்­ளூ­ராட்சி சபை வாக்­கா­ளர்கள் மத்­தியில் சில குழப்­ப­க­ர­மான சூழலை ஏற்­ப­டுத்தும் நிலை காணப்­ப­டு­வதால் இது தொடர்­பாக இக்­குழுக் கூட்­டத்தில் பாரிய கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் இந்த இரண்டு அறிக்கைகள் மற்றும் திலக் மாரப்பன குழுவினால் முன்மொழியப்பட்ட யோசனைகள் தொடர் பாக செயற்குழுக் கூட்டத்தின்போது ஆரா யப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + 19 =

*