;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (01.02.2018)

0

நான்கு மணி நேரத்தில் 1670 பேர் கைது.!!!

நாட­ளா­விய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளை யும் உள்­ள­டக்­கி­ய­தாக முன்­னெ­டுக்­கப்­பட்ட 4 மணி நேர விஷேட நட­வ­டிக்­கை­களில் 1670 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­த­ரவின் உத்­த­ர­வுக்கு அமை­வாக, மாகா­ணங்­க­ளுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதி­பர்­களின் நேரடி கட்­டுப்­பாட்டில் பிரதிப் பொலிஸ் மா அதி­பர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சர்­களின் வழி நடத்­தலில் இந்த சுற்றி வளைப்­புக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போதே இந்த 1670 பேரும் கைது செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர கேச­ரிக்கு தெரி­வித்தார்.

நேற்று முன் தினம் இரவு 11.00 மணி முதல் நேற்று அதி­காலை 3.00 மணி வரை இந்த சுற்றி வலைப்பு நட­வ­டிக்கை தொடர்ந்­த­தா­கவும் இதன்­போது நாட­ளா­விய ரீதியில் 1308 வீதிச் சோதனை சாவ­டிகள் தற்­கா­லி­க­மாக ஏற்­ப­டுத்­தப்­பட்டு அவற்றின் ஊடாக 20913 வாக­னங்கள் மற்றும் 42673 பேரை சோதனை செய்­த­தா­கவும் பொலிஸ் பேச்­சாளர் ருவன் குண­சே­கர மேலும் தெரி­வித்தார்.

கைது செய்­யப்­பட்ட 1670 பேரில் 719 பேர் குடி­போ­தையில் வாகனம் செலுத்­திய குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் 554 பேர் சந்­தே­கத்தின் பேரிலும், பிடி­யாணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த 397 பேரும் இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இந்த விஷேட நட­வ­டிக்­கையின் போது நாட­ளா­விய ரீதியில் விஷ போதைப் பொருள் தொடர்­பி­லான 420 நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இதன்­போது ஹெரோயின் 13.943 கிராமும் கஞ்ஞா 11.293 கிலோவும், வேறு போதைப் பொருட்கள் 176 மில்லி கிராமும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சட்ட விரோத மதுசாரம் 3860 லீற்றர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொள்ளையடிப்பதற்காகவா அரசியல்வாதிகளை தெரிவு செய்கிறீர்கள் ; யாழில் அநுரகுமார கேள்வி..!!

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக 2 கோடி ரூபா பணத்தை தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாங்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த கருத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்தேன். மக்கள் கொள்ளையடிப்பதற்காக இவர்களை தேர்வு செய்தார்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசநாயக்கா கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் பிச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொள்ளையர்களை பிடிக்கப்போகிறோம். சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என கூறிக்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோர் ஆட்சிக்கு வந்தார்கள். 2015 ஆம் ஆண்டு தை மாதம் ஆட்சியை கைப்பற்றி ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் பெப்ரவரி மாதம் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையை செய்தார்கள்.

கொள்ளையர்களை பிடிப்போம். என கூறிக்கொண்டு வந்தவர்கள் கொள்ளையடித்தார்கள். கொள்ளையர்களை இன்றளவும் பிடிக்கவில்லை. இந்நிலையில் அரசியலே வேண்டாம் என கூறும் நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் அரசியல்வாதிகள் கொள்ளைகாரர்களாக மாறியதே. தேர்தலின்போது சைக்கிளில் வருபவர்கள் பின்னர் விலை உயர்ந்த வாகனங்களில் வருகிறார்கள். எங்கிருந்து வந்தது பணம்? எல்லாம் மக்களிடம் கொள்ளையடித்த பணம். 1600 கோடி ரூபா பணத்தை மத்தியவங்கி பிணைமுறி கொள்ளையில் கொள்ளையடித்துள்ளார்கள்.

அதில் 800 கோடி ஈ.பி.எவ் பணம். சாதாரண தனியார் துறை ஊழியர்களுடைய பணத்தை கொள்ளையடித்துள்ளார்கள். இப்போது பிரதமர் ரணில் கூறுகிறார் மத்திய வங்கியிலேயே அந்த பணம் உள்ளதாக. கொள்ளையடிக்கப்பட்ட பணம் இருக்கிறது என்பதற்காக கொள்ளையர்களை விடுதலை செய்ய இயலுமா? பிணைமுறி கொள்ளை தொடர்பான அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடைய பெயர்கள் வரவுள்ளதாக அறிகிறோம். தெற்கைபோல் வடக்கிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியதற்காக 2 கோடி ரூபா வழங்கப்பட்டதாக பாராளுமன்ற உ றுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூறியிருந்த கருத்தை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருந்தேன்.

கொள்ளையடிப்பதற்காகவா இவர்களை பாராளுமன்றம் அனுப்பினீர்கள்? மக்களுக்கு வீடு இல்லை. வாழ்வாதாரம் இல்லை. போஷாக்கு இல்லை. கல்வி இல்லை. முறையான மருத்துவம் இல்லை. இந்த நிலையில் இந்த கொள்ளையர்களால் என்ன பயன்? 70 வருடங்கள் இந்த ஆட்சியாளர்கள் எங்களை ஆட்சி செய்திருக்கிறார்கள். 70 வருடங்களில் இவர்களால் மக்கள் பெற்ற பயன் என்ன?

இந்த உண்மைகளை மறைப்பதற்காக இனவாதத்தை தூண்டினார்கள். சாமானிய தமிழ், சிங்கள மக்களின் பிள்ளைகளை சண்டையிட செய்தார்கள். பலர் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் சண்டை போட்டார்களா? ஒற்றுமையாக இருக்கிறார்கள். தமிழர்களுக்கு சிங்களவர்களை எதிரி எனவும், சிங்களவர்களுக்கு தமிழர்களை எதிரி எனவும் வடக்கிலும், தெற்கிலும் இனவாதத்தை தூண்டி அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொள்ளையடிப்பதை மறைக்க இனவாதத்தை தூண்டினார்கள். இந்த நிலையை மாற்றியமைக்கவேண்டும். அதற்கான சந்தர்ப்பமாக இந்த உள்ளூராட்சி சபை தேர்தலை மக்கள் பயன்படுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

புறாக்களைத் திருடிய சந்தேக நபர்கள் கைது.!!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி, மிச்நகர் ஆகிய கிராமங்களிலுள்ள வீடுகளில் உளவியல் துணைக்காகவும் அழகுக்காகவும் வளர்க்கப்பட்டு வந்த புறாக்கள் திருட்டுப் போயுள்ளதாக முறைபாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வெவ்வேறு கிராமங்களிலுள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 28 புறாக்கள் நேற்று திருடப்பட்டுள்ளன.

இத்திருட்டு இடம்பெற்ற நிகழ்வு சிசிரிவி காணொளிக் கமெராக்களிலும் பதிவாகியுள்ளது.

புறாத் திருட்டில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் 15 புறாக்கள் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பல்வேறு வகையான அழகுப் புறாக்கள் தற்போது உளவியல் துணைக்காகவும் பொழுது போக்கிற்காகவும் வீடுகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை மிகப் பெறுமதியானவை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க விற்கு எவருடனும் டீல் இல்லை.!!!

சட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது . ஐக்கிய தேசிய கட்சியான எங்களிற்கு எவருடனும் எதுவிதமான டீலும் இல்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கு நாங்கள் விரைவில் புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவோம். நாங்கள் யாருடைய நலனுக்காகவும் எமது கொள்கைகளை மாற்றவில்லை.

2020 இல் எவ்வாறு தேர்தலைச் சந்திப்பது என்று ஐக்கிய தேசியக் கட்சி இது வரை எதுவித முடிவும் எடுக்கவில்லை. இலங்கை பொலிஸை மீளமைப்பு செய்வது அவசியமாகிறது. திட்டமிடப்பட்ட குற்றங்களிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

எங்களிற்கு மக்களுடனேயே டீல் உள்ளது. சட்டம் ஒழுங்கை சீராகப்பேணி ஒரு புதிய சூழலை உருவாக்குவதே எமது தேவையாக உள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதால் மட்டும் அந்த வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் என கூற முடியாது. மக்கள் அவரவர் விருப்பப்படியே வாக்களிப்பர் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 8 =

*