;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (02.02.2018)

0

42 வேட்பாளர்கள் உட்பட 373 பேர் கைது

உள்ளூர் அதிகாரசபை தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரையில் 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி முதல் இன்று காலை 06.00 மணிவரை 559 தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறியமை தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவை நாட்டின் வெவ்வேறு பொலிஸ் நிலையங்களில் பதிவாகியுள்ளன.

அதன்படி தேர்தல் சம்பந்தமாக இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளுடன் தொடர்புடைய 42 வேட்பாளர்கள் உட்பட 373 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அநுராதபுரத்திலிருந்து தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியாவுக்கு மாற்றம்.

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

பர்பசுவல் நிறுவனத்தின் சொத்துக்களை கைமாற்ற இடைக்காலத்தடை உத்தரவு

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை 3 ஆம் தரப்பினருக்கு கைமாற்ற கொழும்பு நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு.

மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கா விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (02) இரவு வெளியிடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்று (02) ஹெட்டிபொலவில் நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

500 தேர்தல் தொகுதிகளில் ஜே.வி.பி வெற்றிப்பெறும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஜே.வி.பி சுமார் 500 தேர்தல் தொகுதிகளில் வெற்றிப்பெறும் என கே.டி லால்காந்த தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பொரலஸ்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்குகொள்ளும் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் தகவலுக்கு அமையவே குறித்த ஆய்வு முடிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் கே.டி லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + thirteen =

*