;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (03.02.2018)

0

பொது இடங்களிலும் பொலித்தீன் கவனம்

நாடளாவிய ரீதியில் பொலித்தீன் பாவனையைத் தடை செய்யும் முயற்சியின் அடுத்த கட்டமாக பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள், உலக மரபுரிமை மிக்க இடங்கள் ஆகியனவற்றில் பொலித்தீன் பாவனை நாளை முதல் தடை செய்யப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

எனவே, மேற்படி பொது இடங்களில் பொலித்தீன் பாவனையை தவிர்க்கும்படி மக்களிடமும் பொலித்தீன் பாவனையை ஊக்குவிக்கும் எந்தவித நடவடிக்கைகளிலும் இறங்கவேண்டாம் என வர்த்தகர்களிடமும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ரிஷாத்தை நீதி­மன்றில் ஆஜ­ராக உத்­த­ரவு

வில்­பத்து வனத்தை அழித்து கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள காணி­களை மீண்டும் அர­சாங்கம் கைய­கப்­ப­டுத்த உத்­த­ர­வி­டு­மாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசா­ரிப்­ப­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

சட்­டத்­த­ரணி நாகா­னந்த கொடி­து­வக்கு உள்­ளிட்ட இரண்டு பேரினால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ப்ரீதி­பத்மன் சுர­சேன மற்றும் நீதி­பதி சிரான் குண­ரத்ன ஆகியோர் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தனர்.

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதால் சூழ­லுக்கு பாரி­ய­ளவு பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக மனு­தா­ரர்கள் தமது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இது முற்­றாக சட்­டத்­திற்கு மாறா­னது என்றும் தற்­போது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோத கட்­ட­டங்­களை அகற்றி அந்தக் காணி­களை அர­சாங்கம் மீண்டும் கைய­கப்­ப­டுத்த வேண்டும் என்றும் உத்­த­ர­வி­டு­மாறு மனு­தா­ரர்கள் நீதி­மன்­றத்­திடம் கேட்டுக் கொண்­டுள்­ளனர்.

இந்த மனுவை ஆராய்ந்த நீதி­மன்றம் வழக்கை விசா­ரிப்­ப­தற்கு அனு­ம­தித்­துள்­ள­துடன், பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை, வனப் பாது­காப்பு திணைக்­களம், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

“மஹிந்த எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை வெற்றி பெறுவதற்கு செலவு செய்கிறார்”

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் பெண்கள் புரட்சி செய்ய வேண்டும் ஆண்களும் பெண்களுமாக வெற்றி பெற வேண்டும் ” என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனை கண்ணகிபுரத்தில் நேற்று மாலை நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே சேனாதிராஜா இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும்

“ அரசியல் தீர்வு ஏற்படுகின்ற போது மத்திக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்படும் அதே போன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகமான அதிகாரங்கள் பகிரப்படவுள்ளன.

ஊள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்கள் பகிரப்படும் போது உங்களது கிராமங்களின் அபிவிருத்திக்கான திட்டங்களை நீங்களே வகுக்க முடியும்.

வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகளைப் பெறவும் மாகாணசபையிடமிருந்து தேவைகளை நிறைவேற்றவும் உங்களது தேவைகளுக்கு ஏற்றவாறு வரிகளை விதித்து அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் கிடைக்கவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கு அதிகம் முயற்சிக்கிறார். எங்களிடமிருந்து அடித்துக் கொண்ட பணத்தை செலவு செய்கிறார்.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படாததன் காரணத்தினால் இன விடுதலைக்காகக ஆயதமேந்தி போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

எமது பெண்களை மிக மோசமாக நடத்தினார்கள் அதற்கு பொறுப்பேற்க வேண்டிய போர்க்குற்றம் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தனது செல்வாக்கை நிரூபிக்க இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும்

இந்த நாட்டில் ஆட்சி மாற வேண்டும் என்று நினைத்தவர்கள் தென் பகுதியிலும் உள்ளார்கள் வடக்கு கிழக்கிலும் இருக்கிறார்கள்.

மக்கள் இராஜதந்திர ரீதியாக செயற்பட்டதன் காரணத்தினால் தான் மைத்திரிபால சிறிசேன எமக்கு ஜனாதிபதியாக வந்தார்.

உலக நாடுகளின் ஆதரவு எமக்கு கிடைத்திருக்கின்றது. இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நம்பிக்கைக்குரியவர்களாக தெரிவு செய்ய வேண்டும.;

எமக்கு எதிராக போட்டியிடுகின்றவர்கள் எம்மை பலவீனப்படுத்தி எங்களது வாக்குப் பலத்தை குறைத்து எமது மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மீது வைத்துள்ள நம்பிக்கையை குறைத்து விட்டால் உலக நாடுகளில் நாங்கள் பேசுவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்து விடுவோம்.

ஆயுத பலத்தோடு போராடிய சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்திருக்கின்ற போது எங்களுடைய ஜனநாயக பலத்தை நாங்கள் இழந்து விடக் கூடாது.

நாட்டில் ஆட்சியை மாற்றுவதற்கு ஜனநாயக சந்தர்ப்பங்கள் உதவியாக இருந்தன. யாரும் படையெடுத்த இந்த நாட்டை கைப்பற்ற வில்லை சதி செய்து ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை.

தமிழ் மக்கள் தெற்கில் இருந்த சிங்கள மக்களோடு இணைந்து தங்களுடைய வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சியை மாற்றினார்கள்.

உலக நாடுகளுடன் இணைந்து எமது இனப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் இழந்துவிடக் கூடாது. இக் காரணத்துக்காக எதிர் வரும் தேர்தலில் எங்களுடைய மக்கள் பிளவுபட்டு எதிரிகளுக்கு வாக்களிக்காமல் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்றார்.

மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு விசேட குழு

மீன்பிடி மற்றும் கடல் வள அபிவிருத்தி அமைச்சரின் வேண்டுகோளின்படி, மீன்பிடித் துறைக்கென ஆலோசனைக் குழுவொன்று அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான ஒப்புதலை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

இந்தக் குழுவில் பொருளாதார நிபுணர்கள், சுற்றுச் சூழலியலாளர்கள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கடல் மற்றும் அலை வரைஞர்கள், சமூக நல பிரதிநிதிகள் மற்றும் மீன்பிடி மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்தவர்கள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கை கடல்வளத்தை அபிவிருத்தி செய்வதற்கு நிலையானதொரு கொள்கையை வகுப்புதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டே இந்தக் குழு நியமிக்கப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + two =

*