;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (04.02.2018)

0

சுதந்திரதினத்தை முன்னிட்டு மத வழிபாடுகள்

இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு மதவழிபாட்டு ஸ்தலங்களில் மத வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பௌத்த மத வழிபாட்டு நிகழ்வுகள் காலை 6.30 மணிக்கு கொள்ளுப்பிட்டி பொல்வத்த தர்மகீர்த்திரா-ராம விகாரையில் நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்துமத வழிபாட்டு நிகழ்வு கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்களான டீ.எம்.சுவாமிநாதன், பழனி திகாம்பரம், மனோ கணோசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு பற்றிமா தேவாலயத்தில் கத்தோலிக்க மத ஆராதனை நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொள்வார்.

இராஜங்க அமைச்சர் ஏரான் விக்ரமரட்னவின் பங்களிப்புடன் கிறிஸ்தவ தேவ ஆராதனை கொழும்பு வெல்ல வீதியிலுள்ள மெதடிஸ் தேவாயலத்தில் நடைபெறவுள்ளது.

விசேட துஆ பிரார்த்தனை கொழும்பு அக்பர் ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இதில் அமைச்சர்களான எம்.எச்.ஏ.கலீம், ரவூவ் ஹக்கீம், ரிசாத் பதியூதின், கபீர் ஹசிம் மற்றும் பைஸர் முஸ்தப்பா உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதி கிரியை 8 ஆம் திகதி

விகாரையின் யானை தாக்கி உயிரிழந்த பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

காலஞ்சென்ற பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரர், விகாரையின் மியன்குமார என்ற யானையின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றுக்காலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

லெப்டொப் நடனத்திற்கு கிண்டலடித்த மஹிந்த : நுவரெலியாவை ஏலத்தில் விற்கப்போவதாக தெரிவிப்பு

நாட்டில் கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் காலாசார நடனங்கள் சுதந்திரதினவிழாவை அலங்கரித்தன ஆனால் இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டங்களில் லெப்டொப் நடனம் என்ற ஒரு வகை நடனத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் என முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் “தாமரை மொட்டு” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நுவரெலியா நகரில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்தில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

இக் கூட்டத்தில் முன்னால் அமைச்சரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவருமான ஜீ.எல்.பீரிஸ், முன்னால் அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.பீ.ரத்நாயக்க மற்றும் முன்னால் நுவரெலியா மாநகர சபை முதல்வரும் வேட்பாளருமான மஹிந்த தொடங்பேகமகே, மலையக தேசிய முன்னணி தலைவர் ரிஷி செந்தில்ராஜ் உள்ளிட்ட ஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதாக வாக்குறுதியளித்தவர்கள் அதனை நிறைவேற்றீனார்களா? இல்லை. ஆகவே மலையக தலைவர்களிடம் அதனை வாங்கி தந்த பின்னர் வாக்கு கேட்கவருமாறு நீங்கள் கேட்கவேண்டும்.

நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் நுவரெலியாவையும் ஏலத்தில் விற்க ஆதயத்தப்படுகின்றனர்.

தற்போது எல்லா சந்தர்பங்களிலும் குடும்ப அரசியல் என்று என்னை தூற்றுகின்றனர், ஆனால் ஜனாதிபதிக்கு குடும்ப அரசியல் இல்லாவிட்டாலும், தனியான ஒருவகை குடும்ப ஆட்சி உள்ளது.

எனவே மலையக மக்கள் ஏமாற்றமடைய வேண்டாம், மலையகத்திற்கு ஒரு இலட்சம் வீடுகளை வழங்குவதாக கூறினர் அதுவும் நடைபெறவில்லை. பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதே எனது கொள்கை.

நாட்டை பிரிப்பதற்கு எதிராக பெல்லன்வில விமல ரத்ன தேரர் உள்ளிட்டோர் போராடினர் ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இயற்கை எய்தியுள்ளார். அது முழு நாட்டுக்கும் ஒரு இழப்பாகும்.

இந்த லெப்டொப் நடனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆடுகின்றார்கள். அதை சந்திரிக்கா அம்மையார் ஓரமாக நின்று பார்த்துக் கொண்டு ஆடுகின்றார்.

எனவே நாடு என்னால் அபிவிருத்தி கண்டுள்ளது. ஆகையினால் எம்மோடு கைகோர்த்து வெற்றிவாகை சூடுவோம். நாட்டின் அபிவிருத்தியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்வோம் என்றார்.

அர்ஜுன் அலோஷியஸ், கசுன் பலிசேன கைது

பெர்ப்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியல் மற்றும் அதன் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி இருவரது வீடுகளுக்கும் இன்று (4) காலை சென்றிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களைக் கைது செய்ததாகத் தெரியவருகிறது.

பிணைமுறி விவகாரத்தில் அர்ஜுன் அலோஷியஸ், அர்ஜுன மகேந்திரன் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரை சந்தேக நபர்களாக நீதிமன்றம் நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அர்ஜுன் அலோஷியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, அவர்கள் இருவரும் குற்றப் புலனாய்வுப் பிரிவுத் தலைமையகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

தேசியக் கொடி சுதந்திரமாய்ப் பறக்கிறது

இலங்கையின் 70வது சுதந்திர தின விழாவில், மங்கள வாத்திய இசைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்தார்.

கொழும்பின் பாடசாலை மாணவ, மாணவியர் 110 தேசிய கீதம் இசைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + eight =

*