;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (05.02.2018)

0

புதன்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பிர­சார பணிகள் நிறைவு

எதிர்­வரும் உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான பிர­சார பணிகள் யாவும் நாளை மறு­தினம் புதன்­கி­ழமை நள்­ளி­ரவு 12 மணி­முதல் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் பிர­தான அர­சியல் கட்­சி­களின் இறுதிக் கட்ட பிர­சாரப் பணிகள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. தேர்­த­லுக்கு இன்னும் ஒரு­சில தினங்­களே எஞ்­சி­யுள்ள நிலையில் பிர­தான கட்­சிகள் கடும் பிர­சார செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளன.

அந்த வகையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ள­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் இறுதிப் பிர­சாரக் கூட்டம் பொல­ன­று­வையில் நடை­பெ­ற­வுள்­ளது.

அத்­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­­யி­லான ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் இறுதி தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஹோமா­க­மவில் நடை­பெ­ற­வுள்­ளது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்க, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஆகியோர் வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டின் அனைத்து பகு­தி­க­ளிலும் கடும் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். அத்­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மனோ­ க­ணேசன், இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் தலைவர் ஆறு­முகன் தொண்­டமான், முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்­ளிட்ட அனைத்து அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­களும் தீவிரப் பிர­சாரப் பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் தேர்தல் விதி­முறைப்படி நாளை மறு­தினம் 07 ஆம் திகதி நள்­ளி­ரவு 12 மணி­யுடன் தேர்தல் பிர­சாரப் பணிகள் அனைத்தும் முடி­வுக்கு வர­வேண்டும்.

இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­த­லா­னது கலப்பு முறை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது. அதா­வது தொகுதி மூலம் 60 வீத­மான உறுப்­பி­னர்­களும் விகி­தா­சாரம் மூலம் 40 வீத­மான உறுப்­பி­னர்­களும் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் தெரிவு செய்­யப்­ப­டு­வார்கள். மேலும் விருப்பு வாக்கு முறைமை இந்த தேர்தல் முறையில் இல்லை என்­ப­துடன் பெண்­க­ளுக்­கான இட­ஓ­துக்­கீடு 25 வீத­மாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

தேர்­தலில் 50 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வேட்­பா­ளர்கள் அர­சியல் கட்­சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்­களின் சார்­பாக கள­மி­றங்­கி­யுள்­ளனர்.

தற்­போ­தைய நிலை­மையில் நாட்டில் 341 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்த 341 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எண்­ணா­யி­ரத்து முன்­னூற்று ஐம்­பத்­தாறு உறுப்­பி­னர்கள் தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

மொத்­த­மாக இரு­நூற்று எழு­பத்­தாறு பிர­தேச சபை­களும், 24 மாந­கர சபை­களும், நாற்­பத்­தொரு நக­ர­ச­பை­க­ளு­மாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் புதிய தேர்தல் முறைப்­படி இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 10 ஆம் திகதி சனிக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெறும். சனிக்­கி­ழமை காலை ஏழு மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும்.

இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

70 ஆவது சுதந்திர தின வைபவத்தில் கலந்துகொள்ள இலங்கைக்கு வருகை தந்த ஜப்பான் பிரதமரின் விசேட பிரதிநிதியும், அந்நாட்டின் நிர்மாணத்துறை அமைச்சரும், இலங்கை – ஜப்பான் பாராளுமன்ற நட்புறவு குழுவின் தலைவருமான வடாரு டெகெசிடா (Wataru Tokeshita) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (04) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் இன்று

கட்சி தலைவர்களுக்கிடையிலான கூட்டம் ஒன்று சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் இன்று நடைப்பெறவுள்ளது.

மத்திய வங்கியின் முறிமோசடி தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் ஊழல் மோசடி தொடர்பான அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகள் குறித்த விவாதம் நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

அதுகுறித்து கலந்துரையாடுவதற்கே குறித்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.குறித்த கூட்டம் தொடர்பில், அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொது செயலாளர் நீல் இத்தவல எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

ஊவா மாகாண முதலமைச்சருக்கு தொடரும் சோதனை

அதிபரொருவரை மண்டியிட வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க , தேரர் ஒருவரை அச்சுறுத்தி தாக்க முற்பட்டது தொடர்பில் மனித உரிமை விசாரணையொன்றை ஆரம்பிக்க முடியும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான வௌியாகியுள்ள தகவல்களை கொண்டு இந்த விசாரணையை மேற்கொள்ள முடியும் என அதன் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு குறிப்பிட்டிருந்தார்.

குறித்த தேரரை அச்சுறுத்தி தாக்க முற்படும் காணொளி தற்போதைய நிலையில் , சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பத்தனையில் இன்று அதிகாலை பதற்றநிலை

பத்தனை பகுதியில் பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இனந்தெரியாத நபர் இன்று அதிகாலை பிரவேசித்துள்ளார்.

இதனை நோக்கிய சிறுமி ஒருவர் கூச்சலிட்டதை தொடர்ந்து மௌவுண்ட் வேர்ணண் தோட்ட இளஞைர்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டார்.இளைஞர்களால் பிடிக்கப்பட்ட குறித்த நபரை பத்தனை காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × three =

*