;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (05.02.2018)

0

ஸ்கூட்டியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மஸ்கெலியா நல்லத்தண்ணி பிரதான வீதியின் மவுசாக்கலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறிய ரக உந்துருளி ஒன்றும் வேன் ஒன்றும் மோதுண்டமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் புதிய பிரதமர்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர், சுதந்திர கட்சியின் பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் ஊடக பேச்சாளர், இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பதுளையில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.முறி மோசடி குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் அரசாங்கத்தில் இருந்து நீக்கப்பட்டு, புதிய பிரதமர் ஒருவரின் கீழ் அரசாங்கம் நிறுவப்படவேண்டும்.

விசாரணைகளில் அவர்கள் குற்றமற்றவர்களாக நிருபிக்கப்பட்டால், மீண்டும் அவர்களை இணைந்து கொள்ள முடியும் எனவும் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

கிராம் ஒன்றின் விலை 6ஆயிரத்து 800 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

22 கரட் தங்கம் 51 ஆயிரத்து 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராம் ஒன்று 6 ஆயித்து 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

மோடிக்கு நன்றி கூறினார் டக்ளஸ்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு விடயமாகும் எனத் தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, இதற்கென எமது மக்கள் சார்பாக இந்திய அரசுக்கு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் ஆ. நடராஜன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா, காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, இந்தியாவிலிருந்து சுற்றிவளைத்து – நீண்ட தூரமெடுத்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எமது மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும், நேரடியாக, இலகுவாக, குறுகிய காலகட்டத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இறக்குமதி செய்வதன் மூலம், எமது மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், எமது நாட்டில் தென்பகுதிக்கான பாரிய சந்தைவாய்ப்பினையும் எமது மண்ணில் உருவாக்கிட முடியும்.

இதன் மூலமாக பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி, எமது மக்களின் வாழ்வாதாரங்களை மெம்படுத்துவதுடன், எமது வர்த்தக சமூகத்தினர் வருமானமும் அதிகரிக்கும். இத் திட்டமானது எனது நீண்ட நாள் கனவாக இருக்கின்றது.

அந்த வகையில், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்த காலத்தில், நான் இந்தியா சென்றிருந்தபோது, எனது கோரிக்கையை ஏற்று இந்திய அரசு காங்கேசன்துறை துறைமுகத்தை அகழ்ந்து, அப்பகுதியினுள் இருந்த கழிவுகளை அகற்றி, சுத்தஞ் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. பின்னர், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் எம்மால் இத்துறைமுகம் தொடர்பிலான மேலதிக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க இயலாது போய்விட்டது.

இந்த நிலையில், இந்திய அரசு மேற்படி துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கு எடுத்திருக்கும் முயற்சியானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஏற்கனவே, இந்திய அரசானது எனது கோரிக்கையினை ஏற்று 50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை வழங்கியதோடு மட்டுமல்லாது, எனது அமைச்சின் கீழிருந்த வடகடல் நிறுவனத்திற்கு புதிய இயந்திரங்களையம், முலப் பொருட்களுக்கான முதலீடுகளையும் வழங்கியிருந்தது.

பனை ஆராய்ச்சி நிறுவனத்தைப் புனரமைத்து, நவீன இயந்திரங்கள், வாகனங்கள் என்பவற்றை வழங்கியிருந்தது. வடக்கிற்கான ரயில் பாதை, யாழ்ப்பாண கலாசார நிலையம், துரையப்பா விளையாட்டரங்கு புனரமைப்பு உள்ளிட்ட ஏராளமான பணிகளை எமது மக்களுக்கான முன்னெடுத்துள்ளதுடன், எமது விவசாய மக்களுக்கு உழவு இயந்திரங்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள், பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் எனப் பல்வேறு உதவிகளை செய்திருக்கின்றது. அந்த வகையில், எமது மக்களுக்கென இந்திய அரசு நிறையவே உதவியிருக்கின்றது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 18 =

*