;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (05.02.2018)

0

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய இலங்கையை சேர்ந்த மர்ம படகு

தனுஷ்கோடி பாக்ஜல சந்தி கடற்பகுதியில் இலங்கை பைபர் படகு ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியது குறித்து பாதுகாப்பு வட்டாரங்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே பாக்ஜல சந்தி கடல் பகுதியில் ஆளில்லாத நிலையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் இராமேஸ்வரம் சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பைபர் படகு இலங்கையை சேர்ந்தது எனவும் அதில் சட்டவிரோதமான முறையில் இலங்கை நபர்கள் யாரேனும் தமிழகத்திற்குள் ஊடுருவி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைபற்றப்பட்ட படகினை டிராக்டர் மூலம் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்க்கு கொண்டு சென்றனர்.இந்த ஆளில்லாமல் கரை ஒதுங்கிய படகு குறித்து தனுஸ்கோடி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை மேற் கொண்டு வருகின்றனர்.

சமீப காலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதை பொருள்களும் இலங்கையில் இருந்து தங்கமும் அதிக அளவில் கடத்தப்பட்டு வரும் நிலையில் இந்த இலங்கையை சேர்ந்த ஆளில்லா பைபர் படகு கரை ஒதுங்கிய சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேருவளையில் இருவர் கைது

பேருவளைப் பகுதியில் பணம் வழங்கி அடையாள அட்டை மற்றும் வாக்குப்பதிவு அட்டைகள் பெற்றுக்கொண்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலை பாதுகாக்கவா அலோசியஸின் கைது ? – வாசுதேவ கேள்வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலா மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனரென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள பிணைமுறி விவாதம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இது முழு மோசடியையும் மூடி மறைக்கும் அரசியல் சூழ்ச்சியாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் பிரதமர் பிரதான குற்றவாளி என மறைமுகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய அரசாங்கத்திற்கு தெரியாத உண்மைகள் தற்போது பொது மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலினையும், பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள பினணைமுறி விவகாரத்தில் தமக்கான சாதகத் தன்மையினை பலப்படுத்தவே தற்போது குறித்த கைதுகள் இடம் பெற்றுள்ளன.

10 ஆம் திகதிக்கு பின்னர் இடம் பெறும் பாரிய மாற்றத்தினை நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பொலிசாரிடம் அரை வாங்கியவர் பொலிசாரிடமே முறைப்பாடு

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஊடகவியலாளர் ஒருவரை காவல் துறையினர் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணைகள் அவசியம் என தாக்குதலுக்கு இலக்கான ஊடகவியலாளர் அம்பாந்தோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இவர் இன்றைய தினம் இந்த முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு அரசாங்கம் அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து குறித்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக செயற்பட்டார் என தெரிவிக்கப்பட்டதோடு அவர் மீது பாதுகாப்பு தரப்பினர் தாக்குதலினையும் மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் தீவிர விசாரணைகள் அவசியம் என கோரப்பட்டிருந்த நிலையில், அமைசசர் ராஜித்த சேனாரத்ன அப்போது புதிய விளக்கமொன்றினையும் அளித்திருந்தார்.தாம் வைத்தியராக கடமையாற்றினால் ஆர்பாட்டங்களுக்கு செல்கையில் நான் அரசியல்வாதியாவேன்.

மக்கள் தன்னை அரசியல்வாதியாகவே பார்ப்பார்கள் மாறாக நான் ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருக்கும் சந்தர்ப்பத்தில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் தாம் வைத்தியர் என்பதால் தன்னை விட்டு விடுங்கள் என்று கூறமுடியாது.

ஆர்பாட்டத்தில் பங்கேற்க வந்தவர் பின்னர் தன்னை ஊடகவியலாளராக வெளிக்கொணர்ந்தாரா அல்லது ஊடகவிலாளராக வருகை தந்து பின்னர் அரசியல் ஆதரவாளராக காண்பித்துக்கொண்டார என்பது தெரியவில்லை.

ஆகையினால் அவரை விசாரணைக்குட்படுத்துவது அவசியம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளது.

சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்.

சீன மக்கள் அரசியல் ஆலோசகர் சபையின் துணைத்தலைவர் வாங்கின்மின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்திருந்தபோதே சீன மக்கள் குடியரசின் சீன மக்கள் அரசியல் ஆலோசனை சபையின் உபதலைவர் வாங் கின்மின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்துக் கலந்துரையாடினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 7 =

*