;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (06.02.2018)

0

சல்மானுக்கு பதிலாக நஸீர்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அவ்விடத்தை நிரப்புவதற்காக ஏ.எல்.எம் நஸீர் பதவியேற்றார்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நாளை வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நாடாளாவிய ரீதியில் கல்வி சாரா ஊழியர்கள் தீர்மானம் மெற்கொண்டுள்ளனர் என பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் ஒன்றிணைந்த குழுவின் தலைவர் எட்வட் மல்வத்தஹே தெரிவித்தார்.

சுமார் ஒன்றரை வருடங்கள் தங்களது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் இதுவரை எந்தவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்துள்ள கல்வி சாரா ஊழியர்கள்,கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி பல பிரச்சினைகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்ட போதிலும் இதுவரை குறித்த இணக்கப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அறிவித்துள்ளனர்.

இதனாலேயே 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

“போதைபொருள் வாங்குபவர்களுக்கு தான் தெரியும் விற்கப்படும் இடம்”

“போதைபொருள் வாங்குபவர்களுக்கு தான் தெரியும் விற்கப்படும் இடம். வெறுமனே பிரச்சாரம் செய்பவர்களுக்கு தெரியாது. எனவே போதைபொருள் பாவிப்பவர்களிடம் தெரிந்துக்கொள்ளலாம் போதைபொருள் எங்கு உள்ளது என்று” என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்கு ஐ.தே.க. யின் “யானை” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து டிக்கோயா நகரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஹட்டனில் போதைபொருள் இல்லாத நகரமாக்குவோம் என பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றது. ஹட்டன் நகரில் இவ்வளவு காலமாக போதைபொருள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் வாங்குபவர்களுக்கு மட்மே தெரியும். யாரோ ஒருவன் போதைபொருள் விற்பனையில் ஈடுப்படுவதற்காக முழு நகரத்தையும் குற்றம் சுமத்த முடியாது.

ஹட்டன் நகரம் இன்று பல மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் போற்றுகின்ற நகரமாகும். இன்று இந்த நகரத்தை கேவலப்படுத்துகின்றார்கள்.

ஹட்டன் நகரத்தில் போதை பொருள் உள்ளது! போதை பொருள் உள்ளது! என்று பிரச்சாரம் செய்து நகரத்தை கேவலப்படுத்துகின்றார்கள். ஹட்டன் நகரத்தில் படித்த சமூகம் உள்ளது. சிறந்த பாடசாலைகள் காணப்படுகின்றன. இவ்வாறான மத்தியில் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதனால் எதையும் சாதிக்க முடியாது.

மேலும் நுவரெலியாவில் மதுபான பாவனை அதிகமாக காணப்படுகின்றது என்கிறார்கள். இதற்கு காரணம் ஒன்று உள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் மதுபான பாவனை அதிகம் என்று நான் கூற மாட்டேன். நுவரெலியா நகரம் ஒரு சுற்றுலா பிரதேசமாகும். நுவரெலியாவிற்கு தான் இலட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

வெளிநாட்டவர்களும் அதிகமாக மதுபானம் பாவிப்பதன் காரணமாக எமது தோட்ட தொழிலாளர்கள் மாத்திரம் அதிகமாக மதுபானம் பாவிக்கின்றார்கள் என்று விளக்கம் செய்ய முடியாது.

தற்பொழுது சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக செல்பவர்களும் போதைபொருள் பாவனையில் ஈடுப்படுகின்றனர். இதற்காக மலையகத்தில் போதைபொருள் அதிகம் என்றும் கூற முடியாது.

வெளிநாட்டவர்கள் அதிகமாக மதுபானம் பாவிப்பதனால் நுவரெலியா மாவட்டத்தில் அதிகமாக மதுபான விற்பனை செய்யப்படுகின்றதே தவிர எமது தோட்ட தொழிலாளர்களினால் தான் அதிகமாக மதுபான விற்பனை இடம்பெறுகின்றது என்று கூறினால் எவ்வாறு நம்ப முடியும்?

எனவே தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடாக பல அபிவிருத்திகளை செய்து வருகின்றது.

ஆகவே இந்த அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென்றால் நகர சபையை நாம் கைப்பற்ற வேண்டும். நகர சபையை நாம் கைப்பற்றினால் தான் எமது நகரத்திற்கு இன்னும் பல நவீன முறையிலான புதிய திட்டங்களை நாம் முன்னெடுக்க முடியும்.

நகர சபைகளில் எமது உறுப்பினர்கள் அதிகாமாக வந்தால் தான் எமக்கு தேவையானவற்றறை நாமே செய்துக்கொள்ள முடியும்.” என்றார்.

பெண்கள் கடத்தப்படுகின்றமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம்

நேபாளத்தில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்படுகின்றமைக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிராக நேபாள அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.நேபாளத்தில் இருந்த பல பெண்கள் வேறு நாடுகளில் தொழில்பெற்றுத் தருவதாக ஏமாற்றப்பட்டு, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

இதுதொடர்பில் உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை தண்டனைக்கு உட்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின், குடியேறிகளுக்கான மனிதஉரிமைகள் துறை விசேட அறிக்கையாளர் ஃபெலிமப் கொன்சலேஸ் மொராலெஸ் தெரிவித்துள்ளார்.

நீர்வழங்கல் சபை பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு

நீர் வழங்கல் சபை பணியாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவடைந்துள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இன்று மதியம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த திர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + three =

*