;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (06.02.2018)

0

“பலர் தூக்குக் கயிற்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும்”

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் இந்த ஆட்சியினையும் தாண்டி கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து ஆராயப்பட வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ள போதிலும் அதையும் தாண்டி 1990 ஆம் ஆண்டில் இருந்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என நிதி இராஜங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன தெரிவித்தார். இந்த ஆட்சி முழுமையான ஆட்சி அல்ல. ஆனால் நாம் முன்னெடுக்கும் சுயாதீன நீதி செயற்பாடுகள் காரணமாக பலர் தூக்குக் கயிற்றுக்கும் போகும் நிலைமை ஏற்படும். குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்கு அறிக்கைகள் தொடர்பிலான பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த சபை ஒத்திவைத்து வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதானது,

பிணைமுறி , நிதி மோசடி அறிக்கைகள் குறித்து இன்று விவாதிக்கப்படுகின்றது, எனினும் விவாதத்தை விடவும் குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்பதே முக்கியமானது. நாட்டு பொது மக்களும் அதையே விரும்புகின்றனர். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் கோப் குழுவில் எதிர் தரப்பின் ஒருவரை நியமிப்பதாக வாக்குறுதி வழங்கினோம். அதன் அடிப்படையில் நியமனங்கள் இடம்பெற்று அதன் மூலம் மத்திய வங்கி ஊழல் விவகாரங்கள் வெளிவர ஆரம்பித்தது.

அதன் பின்னர் குறித்த விடயங்கள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவை பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு இன்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கள்ளர்கள் சகல இடங்களிலும் உள்ளனர். ஊழல் மோசடிகள் என்பது எமது கலாசாரத்தின் ஒரு அங்கமாக பதிவாகிவிட்டது. இன்று ஊழல் குறித்து கூறும் நபர்களுக்கும் அது நன்றாகவே தெரியும். எனினும் மாற்றம் என்னவென்றால் முன்பெல்லாம் ஊழல் குறித்து பேசப்பட்ட போதிலும் குற்றவாளிகள் எவரும் தண்டிக்கப்படவில்லை.

எனினும் இன்று அவ்வாறு அல்ல , குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதே அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதுதான் எமது மாற்றம். ஜனாதிபதி அணைக்குழு அறிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக நெடுஞ்சாலையில் புதிய அமைப்பு

அதிவேக நெடுஞ்சாலையில் வேக கட்டுப்பாட்டை மீறும் வாகனங்களின் புகைப்படங்களை, அந்த வாகனங்கள் வெளியேறும் இடங்களிலேயே வழங்குவதற்கான புதிய வேக அளவீட்டு அமைப்பு பொருத்தப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

காவல்துறையுடன் இணைந்து அமுல்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் போது கண்காணிப்பு நேரம், வேகத்துடன், வாகனங்களின் இலக்கங்களும் தெளிவாக தெரியும் வகையில் அந்த புகைப்படம் வழங்கப்படவுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமை பிரிவு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெறும் விபத்துக்களில் நூற்றுக்கு 27 வீதம், அதிக வேகத்தால் இடம்பெறுவதாக அந்த பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

சிறையிலிருக்கும் அர்ஜுன் அலோசியஸ், பலிசேனவை பார்க்கச் சென்றோரின் பெயர்களை வெளியிடுக

மத்திய வங்கி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரை சிறைக்கு சென்று பார்க்கச் சென்றவர்களின் பெயர் பட்டியலை பாராளுமன்றத்திற்கு வெளியிட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க சபையில் தெரிவித்தார்.

அத்துடன் மத்திய வங்கி பிணைமுறி மோசடி கொடுக்கல் வாங்கல் செய்தது முதல் பிரதமர் முன்னெடுத்த செயற்பாடுகள் வரை பார்க்கும் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையாக மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்தும் அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் நேர்மையானது அல்ல. ஆகவே அவரினால் தனது பொறுப்பில் இருந்து விலக முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பாக பிரதமர் ரணில் வி்ககிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

7 பேர் கொண்ட விஷேட குழுவொன்று நாளை டுபாய் நோக்கி பயணம்

டுபாய் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை 7 பேர் கொண்ட விஷேட குழுவொன்று டுபாய் நோக்கி பயணிக்கவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × two =

*