;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (07.02.2018)

0

பர்தாவை தடைசெய்ய மற்றொரு நாடு முஸ்தீபு

பொது இடங்களில் நிக்காப் மற்றும் பர்தா போன்ற முகத்தை மறைக்கும் ஆடைகளைத் தடை செய்ய டென்மார்க் அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இதை அறிவித்த அந்நாட்டின் நீதியமைச்சர், டென்மார்க் வழக்கப்படி இரண்டு பேர் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும்போது, ஒருவர் தனது முகத்தை மறைத்திருப்பது மற்றவரை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்தடையை அமுல்படுத்துவதன் மூலம், டென்மார்க்கில் ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் மரியாதையும் செலுத்துவதை உறுதிசெய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாலோசனை மனித உரிமைகள் குறித்து ஆராயும் அரசு சார்பற்ற நிறுவனம் ஒன்றின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அதன் கருத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு பரிந்துரையை அந்நாட்டின் குளிர்கால பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

“தூய அரசியல் இயக்கத்துக்கான பயணம் 10ஆம் திகதி ஆரம்பம்”

மக்கள் மீது நம்பிக்கை வைத்து தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை முன்கொண்டு செல்லும் நிகழ்ச்சித் திட்டம் பெப்ரவரி 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மஹரகமவில் நேற்று (6) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

“ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்காக புதிய கட்சியொன்றினூடாக கட்டியெழுப்பப்பட்டுள்ள பிம்பம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி, நாட்டை நேசிக்கும் மக்களுடன் இணைந்து வீழ்த்தப்படும்.

“எதிர்காலத்தில் இந்த நாட்டை சுபீட்சமான தேசமாகக் கட்டியெழுப்புவதற்காக தூய அரசியல்வாதிகளே தலைமைதாங்க வேண்டும். அத்தகைய மக்கள் சார்பு இயக்கத்தில் முன்னணி வகிக்கக்கூடியது நாட்டின் மக்கள் சார்பு இயக்கமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே.

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை, நான் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திக்கிறார். முன்னாள் சபாநாயகரின் இல்லத்திற்கு என்னை அழைத்து, கட்சி உறுப்பினர்களின் முன்னிலையில், தலைவர் பதவியை எனக்குப் பொறுப்பளித்தவரே முன்னாள் ஜனாதிபதிதான். ஆனால், இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகக் கூறும் கூற்றுக்கள் என்னைக் கவலையடையச் செய்கின்றன” என்று ஜனாதிபதி கூறினார்.

சமையலறைக்குள் வந்த காட்டு யானையால் நடந்த விபரீதம்

மட்டக்களப்பு – பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப்பற்றுக் கோட்டப் பிரிவிலுள்ள மண்டூர் 39ஆம் கொலனி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலைச் சமையலறைக்கு வந்த காட்டு யானையால் கட்டடம் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பாடசாலைக்கு சென்ற காட்டு யானை அங்கு சமையலறையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை உண்டு விட்டு சென்றுள்ளதாக பாடசாலை அதிபர் ரீ.திருவருட்செல்வன் கூறியுள்ளார்.

பாடசாலை சமையலறையை சேதமாக்கி விட்டே யானை உள்ளே நுழைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெரும் எண்ணிக்கையிலான காட்டு யானைகள் அவ்வப்போது கிராமத்திற்குள் வருவதால் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 8 =

*