;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (08.02.2018)

0

சட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் – இராஜாங்க அமைச்சர் ஏரான்

மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்தும் முறை தாமதமாவதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறி மோசடி குறித்த குற்றவாளிகளுக்கு கட்டாயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட நபர் கைது

தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட சந்தேக நபர் ஒருவர் சிலாப காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் -இலிப்பதெனிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் -இலிப்பதெனிய பிரதேசத்தினை சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தே நபர் சிலாபம் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சிலாப காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

கறுப்பு பட்டியலில் இலங்கை

பணச்சலவை மற்றும் தீவிரவாத நிதியளிப்பு அதிகம் இடம்பெறும் நாடுகளைக் கொண்ட கறுப்பு பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை, டீயுனீசியா மற்றும் ட்ரினேட் என் டொபேகோ ஆகிய நாடுகளை உள்ளடக்குவதற்கான யோசனை கடந்த 2ம் திகதி முன்வைக்கப்பட்டது.ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் 375 உறுப்பினர்கள் குறித்த உள்ளடக்கத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், 283 உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இலங்கை உள்ளிட்ட குறித்த நாடுகளில் பணச்சலவை போன்ற நிதிமுறைக்கேடுகள் அதிகம் இடம்பெறும் நிலையிலேயே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவு

அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளன.

இதன்படி இனிவரும் நாட்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்வதும், அதுசார்ந்த கூட்டங்கள், சந்திப்புகள் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை காட்சிப் படுத்துவதும் தடைவிதிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வேட்பாளர்கள் தங்களது வாகனத்தில் கட்சியின் சின்னத்துடனான கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வாகனத்தில் சுவரொட்டிகளை அல்லது பதாதைகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தேர்தல் விதிமுறைகளை இறுக்கமாக கடைபிடிக்க அனைத்து காவற்துறை நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகளை மீறுகின்ற யாரையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் காலத்தில் மொத்தமாக 65 ஆயிரத்து 758 காவற்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர, காவற்துறை தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 26 ஆயிரத்து 480 பேர் வாக்குச் சாவடிகளில் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அவர்களுக்கு மேலதிகமாக தேர்தல் வாக்குச் சாவடிகளுக்கு இடையில் நடமாடும் காவற்துறை சேவையும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாவட்ட ரீதியாக 140 கலகம் அடக்கும் காவற்துறை பிரிவுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 8 =

*