;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (08.02.2018)

0

பிடி இறுகும் பத்திரிகையாளரின் கொலை வழக்கு

பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக விளக்கமளிக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன மற்றும் முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் ப்ரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பும் முயற்சியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லசந்த விக்மரதுங்க படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியில், இவ்விருவருமே கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பு வகித்திருந்தனர்.

லசந்தவின் கொலை தொடர்பான முக்கிய தடயங்களைத் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்படவுள்ளது.

ஏற்கனவே, மேற்படி கொலைச் சம்பவம் குறித்த விசாரணைக்காக இவ்விருவரும் மற்றொரு உயரதிகாரியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் மனு அளித்திருந்தனர்.

அதன் பேரில், இவர்கள் மூவருடைய கடவுச் சீட்டுக்களையும் நீதிமன்றம் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குற்றவாளிகளுக்கு இருபது ஆண்டு கடூழியச் சிறை

கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நான்கு பேருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரலகன்வில பகுதியில் 2004ஆம் ஆண்டு பெண் ஒருவர் நான்கு பேரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணைகள் அண்மையில் நிறைவுற்றன.

இவ்வழக்கில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்டவர்கள் நீதிபதியால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, நான்கு பேருக்கும் இருபது ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் நால்வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா இரண்டு இலட்ச ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10ம் திகதி அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு

எதிர்வரும் 10ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என்று கலால் திணைக்கள ஆணையாளர் ஹெலன் மீகஸ்முல்ல கூறியுள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 1 =

*