;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (11.02.2018)

0

கைதுசெய்யப்பட்ட 3 இந்திய மீனவர்கள் விடுவிப்பு..!!

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கடந்த 16ஆம் திகதி கடற்படையினரினால் கைதுசெய்யப்பட்ட 16 இந்தியர்களுள் 3 இந்தியர்கள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்படையினரின் ஒத்துழைப்புடன் இவர்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை ஒப்படைக்கும் நிகழ்வு இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவினரினால் நேற்று காங்கேசன்துறை வடக்கில் சர்வதேச கடற்பரப்பில் இடம்பெற்றது.

மாத்தறை – கதிர்காமம் புதிய ரயில்வேத்திட்டம் 2020 ஆம் ஆண்டில் நிறைவு..!!

மாத்தறை கதிர்காமத்திற்கிடையிலான புதிய ரயில்வேத் திட்டம் 2020ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இரண்டு கட்டங்களாக இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மாத்தறையில் இருந்து பெலியத்த வரையில் முதலாம் கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக 228 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.

350 குடும்பங்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். சுவீகரிக்கப்பட்ட காணிகளின் தொகை சுமார் 87 ஹெட்டேயர்களாகும். இதற்கு இழப்பீடாக 993 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு பாரிய பின்புலமாக அமையும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவையின் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையாக 1356 கோடி ரூபா..!!

கடந்த பெரும்போக பயிர்ச்செய்கைக்கு உரமானியம் , மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1365 கோடி ரூபா இழப்பீடு செலுத்தப்பட்டள்ளதாக விவசாய அமைச்சு தெரிவிததுள்ளது.

15 இலட்ச விவசாயிகளுக்கு இந்த இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2017ஆம் ஆண்டில் பெரும்போக உரமானியமாக 84இலட்சத்து 226 ரூபா செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக விவசாய மற்றும் விவசாய காப்புறுதி சபை மூலம் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 520 கோடி ரூபா நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்திலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் உரமானியம் மற்றும் உற்பத்திகளுக்கான இழப்பீட்டுதொகை தொடர்ந்தும் வழங்கப்படும் என்ற விவசாய அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

சிவனொளிபாத யாத்திரை செல்லும் பக்தர்களின் நலன் கருதி விசேட ரயில் சேவை..!!

சிவனொளிபாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி கொழும்பு கோட்டைக்கும் ஹட்டனுக்கும் இடையில் கடுகதி ரயில் சேவையொன்று ஈடுப்படுத்தப்பட்டு இருப்பதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

இந்த ரயில் இரவு 7.30க்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்பட்டு அதிகாலை 12.45க்கு ஹட்டன் ரயில் நிலையத்தை சென்றடையும். பின்னர் குறித்த ரயில் காலை 8.30 க்கு புறப்பட்டு பிற்பகல் 2.30 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

ஆசனங்களை ஓதுக்கக்கூடிய வசதிகளை கொண்ட இந்த ரயில் ராகம கம்பஹா வெயாங்கொட விரிகம பொல்காவெலை ரம்புக்கனை ஹிஹலகோட்டே கடுகன்னாவ பெராதனியா கம்பளை நாவலப்பிட்டிய வட்டவளை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும்.

மே மாதம் 1 ஆம் திகதி வரையில் இந்த ரயில் சேவை நடைபெறும். வாரத்தில் நடுப்பகுதியில் மாத்திரம் சில தினம் தவிர ஏனைய நாட்களில் ரயில் சேவை இடம் பெறும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 2 =

*