;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (11.02.2018)

0

புதிய அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி முன்வரவேண்டும்..!!

வெளியாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன், மக்களின் அபிப்ராயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் என்றும், பிரதமரை பதவி நீக்கிவிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பதுக்கான தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகளை வெளியிடும் பத்தலகெதர வித்தியாலய மத்திய நிலைய வளாகத்தில் வைத்து இன்று (11) இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம்..!!

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (11) நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலவை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்..!!

கதிர்காமம் கந்தசுரிந்துகம பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலவை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளருக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்ததாக காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் காவல் துறையினருக்கு முறைப்பாடொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கமையவே விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*