;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (11.02.2018)

0

வெலிகமவில் பழக்கிராமங்கள் ஸ்தாபிக்கும் திட்டம்..!!

நாட்டின் பல பாகங்களிலும் 15 ஆயிரம் பழக்கிராமங்களை ஸ்தாபிக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தி;ட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் 3 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கிராமங்களில் முதற்கட்டமாக சீதா, தோடை முதலான தாவரங்கள் பயிரிடப்படவுள்ளன. கிராமவாசிகள் மத்தியில் தாவரக் கன்றுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு..!!

இலங்கையின் மனிதவள சக்தியில் பெண்களின் பங்களிப்பு 2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017 ஆம் ஆண்டில் 35.6 சதவீத்தினால் அதிகரித்துள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடன் இது தொடர்பாக மேற்கொள்ளள்ப்பட்ட ஆய்விற்கு அமைவாக பெண்களில் 31 இலட்சத்து 40 ஆயிரத்து 787 பேர் பணிகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் பெண்கள் தொழில்வாய்ப்பு 1.7 சதவீத்திற்கும் 6 சதவீத்திற்கும் இடையில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக நாட்டில் தயாரிப்பு மற்றும் சேவை ஆகிய துறைகளில் ஆண்களிலும் பார்க்க பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு கூடியுள்ள திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தரமான மிளகாயை ஏற்றுமதி செய்ய தீர்மானம்..!!

எதிர்காலத்தில் தரத்தில் சிறந்த மிளகாயை மாத்திரம் ஏற்றுமதி செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் உற்பத்திகளுக்கு இருக்கும் நன்மதிப்பை தொடர்ந்து பேணுவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

2016ஆம் ஆண்டு மிளகாய் ஏற்றுமதியின் மூலம் ஆயிரத்து 80 கோடி ரூபாவிற்கு மேலான வருமானம் கிடைத்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் – இலங்கை கூட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை..!!

ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையில் பல்வேறு துறைகளில் அதாவது வர்த்தக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தூதுக்குழு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

ஈரானின் எரிசக்திதுறையின் உயர்அதிகாரி ரசோல் தலைமையிலான குழுவினர் இலங்கை அதிகாரிகளுடன் இத்துறைகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி பின்னர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இதற்கான திட்டங்களை துரிதமாக விரிவுபடுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.

இலங்கைக்கும் ஈரானக்கும் இடையில் சுகாதாரம் மற்றும் கலாச்சார துறைகளை பரிமாறிக்கொள்வது தொடர்பிலும் உடன்படிக்கை குறித்து இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதி வர்த்தக தொழிற்துறை அமைச்சர் மற்றும் ஏற்றுமதி துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஐக்கிய அரபு இராஜ்யம் – இலங்கை 1.34 பில்லியன் வர்த்தக நடவடிக்கை..!!

ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் தற்போது 1.34 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கான கன்சல்ட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கும் இலங்கைக்கும் இடையில் கன்சல்ட் ஜெனரல் இராஜ தந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடநிறைவை குறிக்கும் வகையிலும்; இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது.

டுபாயிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த வைபவம் நடைபெற்றது.

இலங்கைக்கான கன்சால்ட் ஜென்ரல் டுபாய் மற்றும் கிழக்கு ஐக்கிய அரபு இராஜியத்திற்கான கன்சல் ஜெனரல் சரித ஜட்டகொட உரையாற்றுகையில்,

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளுர் மற்றும் சர்வதேச ரீதியில் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை விபரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*