;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.02.2018)

0

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! இன்றைய காலநிலையில் திடீர் மாற்றம்

ஊவா மாகாணம் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஓரளவில் மழை பெய்யக்கூடும் எனவும் நாட்டின் மற்றைய பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிக கடும் காற்று வீசக்கூடும் எனவும் , இதன் காரணமாக மின்னலாம் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

சாதனை வெற்றி கிடைத்தது இதனால்தான் – ஜீ எல் பீரிஸ்

அரசாங்கம் அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த தேர்தலை மக்கள் கருத்துக் கணிப்பொன்றாகவே மக்கள் பார்க்கின்றனர்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதா நிராகரிப்பதா? என்ற கேள்வியே மக்கள் முன்னிருந்தது.

இதற்கு மக்கள் தக்க பதிலை அளித்ததன் ஊடாக தேர்தல் வரலாற்றில் எப்போதும் கிடைக்காத வெற்றியொன்று தற்பொது கிடைத்துள்ளதை காண முடிகின்றது.

இந்த வெற்றியின் பின்னர் நாட்டை ஆளுவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லையென ஜீஎல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான இந்திய கடற்றொழிலாளர்கள் விரட்டியடிப்பு

இலங்கை கடற்பரப்பில் வைத்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய கடற்றொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சத்தீவு கடற் பகுதியில் நேற்று அவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த வேளையே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

460க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் கடற்றொழிலில் ஈடுப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தமிழகத்தின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீய சக்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன – அனுர

மோசடிகளில் ஈடுபட்ட ஒரு தரப்பு மீண்டும் தலை தூக்குவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்ததின் பொறுப்பை மக்களே ஏற்க வேண்டும் என ஜேவிபி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டின் பின்னர் மைத்திரி மற்றும் ரணில் அரசாங்கத்தின் நன்மை தீமைகளை பரிசீலிக்கும் ஒரு தேர்தலாக இந்த தேர்தல் அமைந்தது.

அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 8 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட தீய சக்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளது என்பதை தேர்தல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இதேவேளை, தாம் எதிர்ப்பார்த்த பெறுபேறு கிடைக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு வாக்குகள் தமது கட்சிக்கு கிடைத்துள்ளதாக அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

தற்போதைய நிலையில் ஜேவிபியை நோக்கி குறிப்பிடத்தக்க அளவு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine + 19 =

*