;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (12.02.2018)

0

தொண்டராசியர்களின் நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

தொண்டராசியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.

அதுவரையில், எதிர்வரும் 15ம் திகதி வழங்கப்படவிருந்த அவர்களது நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால், வடக்கு கிழக்கு தொண்டராசிரியர்கள் இணைந்து இன்று போராட்டம் ஒன்றை நடத்தினர்.

இதன்போது ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

கூகுல் நிறுவனம் தமிழ் மொழிக்கு வழங்கியுள்ள அங்கீகாரம்

கூகுல் நிறுவனத்தின் விளம்பர தொழில்நுட்பமான எட்சென்ஸ் பயன்பாட்டுக்கு தமிழ் மொழியும் உள்வாங்கப்பட்டுள்ளது.

கூகுல் நிறுவனம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இதன்படி தற்போது தமிழ் மொழியில் விளம்பரங்களை அமைத்து, தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை இலக்கு வைத்து, அவற்றை பிரபல்யப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எட்சென்ஸில் மொத்தமாக 41 மொழிகள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மாத்திரமே அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்தில் ஐ.தே.கட்சியின் தோல்விக்கான காரணத்தை கூறிய திகாம்பரம்

தேசிய அரசாங்கத்தினுள் நிலவிய முரண்பாடுகளும், ஒருசிலரின் ஊழல்களுமே ஐக்கிய தேசிய கட்சியின் பின்னடைவுக்கு பிரதான காரணமாக அமைந்திருப்பதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கைஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு ஜனநாயகப் பண்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

எனினும் கடந்தகால ஆட்சியாளர்களின் மோசடிகாரர்களை அம்பலப்படுத்துவதற்கு முன்பதாக தேசிய அரசாங்கத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளும் ஒரு சிலரின் ஊழல் மோசடிகளும் நாடளாவிய ரீதியாக மக்கள் மனதில் அதிருப்தியைக் காட்டியுள்ளன.

குறிப்பாக பிணை முறி விவகாரம் நாடு தழுவிய ரீதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளமை புலனாகிறது.மலைநாட்டிலும் இதுவே நிலைமை.தொழிலாளர்கள் தமது ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்டுவிட்டதாக பிரச்சாரத்திற்கு அஞ்சிவிட்டனர்.

தேசிய அரசாங்கத்திற்குள் இருந்த பனிப்போர் தேர்தல் காலத்தில் வெளிப்பட்டது.அரசாங்கத்துக்குள்ளேயே பல்வேறு விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதற்கு ஜனாதிபதியே முன்னிலை வகித்தார் என்று சொல்லலாம்.தன்னை தவறற்றவர் எனக் காட்டிக்கொள்வதற்காக அவர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் ஆளுகின்ற அரசாங்கத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது.

கடந்த ஆட்சியில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் பல இருந்தபோதும் அவை குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படவில்லை.

பாரிய ஊழல் மோசடிகளுக்கு மாறாக சிறு, சிறு குற்றங்களைக் காரணம் காட்டியே கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்றன.

அதே நேரம் தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் பிணை முறிவிவகாரம் தொடர்பில் துரிதமாக விசாரணைகள் நடைபெற்றதுடன் தேர்தல் காலத்தில் அந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டமை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளில் பிணை முறி மோசடியின் காரணமாக தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி சூறையாடப்பட்டுள்ளதாக அரசுக்கு எதிராகக் கொண்டு செல்லப்பட்ட பிரச்சாரம் மக்களை அச்சத்துக்கு உள்ளாக்கியது.

தோட்டத் தொழிலாளர்களின் ஒரே சேமிப்பாகவும் சொத்தாகவும் இருப்பது ஊழியர் சேலாபநிதிதான்.

அதனை இழக்கப்போகிறோம் என்ற பய உணர்வு அவர்களிடத்தில் அழுத்தமாக முன்வைக்கப்பட்டதை இறுதிநேர தேர்தல் பரப்புரைகளின்போது எம்மால் உணரக்ககூடியதாக இருந்தது.

நகரை அண்டிய தோட்டப்பகுதிகளின் தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது அது நன்றாகவே புலப்படுகிறது என்று அமைச்சர் பழனி திகாம்பரம் தமது ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

செட்டியார் தெருவில் இன்றைய தங்க விலை நிலவரம்

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 100 ரூபாய் அதிகரித்து, 53 ஆயிரத்து 800 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 725 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

22 கரட் தங்கம் 200 ரூபாவால் அதிகரித்து, 50 ஆயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் ஒன்று 6 ஆயித்து 275 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 2 =

*