;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (12.02.2018)

0

நாமலுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணித் தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மாதம் 24 ஆம் திகதி முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் நேபாலுக்கு செல்லவுள்ளதாக விளக்கமளித்து நாமல் ராஜபக்ஷவில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிரிஸ் நிறுவனத்திடமிருந்து பெற்றுகொள்ளப்பட்ட நிதியை முறைக்ககேடாக பயன்படுத்தியதாக கூறி அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் எப்படி நடந்தது? – மனம் திறந்தார் சபாநாயகர்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமானதாகவும், அமைதியான முறையில் நடைபெற்றமையானது ஜனநாயகத்திற்கு கிடைத்துள்ள வெற்றியாகும் என அரசியலமைப்பு சபையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜனசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் விதிகளை மீறல், வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுடல், உள்ளிட்ட ஏனை மோசடிகள் எதவும் இம்முறை இடம்பெறவில்லை.

எதிர்காலத்தில் நியாயமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கு முன்மாதிரியாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது என சபாநாயகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சுதந்திரமான முறையில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மஹிந்த எமக்கு வேண்டாத ஒருவர் அல்ல – கணபதி கனகராஜ்

இந்த நாட்டிலே சிறுபான்மை இனமான நமக்கு எந்தவொரு பெரும்பான்மை அரசாங்கமும், தலைவர்களும் உரிமைகளை தட்டில் வைத்து தரவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”இந்த நாட்டில் அடுத்தடுத்து வரும் அரசாங்கங்களோடு இணைந்தவாறு நமது மக்களுடைய உரிமைகளை இதுவரை காலமும் பெற்று வந்தோம்.

ஒரு காலத்தில் நாடற்றவர்களாக நாதி இழந்தவர்களாக பிரஜா உரிமைகள் அற்றவர்களாக வாழ்ந்த நமது இனம் கள்ளத்தோனி என்ற பெயருக்கும் ஆளாகிய நிலையில் வாழ்ந்தோம்.

இதன்போது சௌமிய மூர்த்தி தொண்டமான் ஐயா அவர்கள் தலைதூக்கியதன் பின் பல்வேறு உரிமைகளை பெற்றோம். பிரஜா உரிமை அத்தோடு இந்த நாட்டில் வாழக்கூடியவாறு இறுப்பு உரிமை ஆகியவற்றை பெற்றோம். இதன் மூலம் பாடசாலைகள் அமைத்தும் பல்கலைகழகங்கள் அமைத்தும் பல்லாயரக்கணக்கான அரசாங்க தொழில்களையும் பெற்றோம்.

இவைகள் அவ்வப்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்களோடு பேரம் பேசு ஒரு சக்தியை நாம் வைத்திப்பதால் இவைகளை பெற்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோடு இணைந்து தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் எமது தொடர்பு இருந்துக்கொண்டே இருக்கின்றது.

அதேபோன்று மஹிந்த ராஜபக்ஷ எமக்கு வேண்டாத ஒருவரும் அல்ல. அவரின் கட்சி எமக்கு வேண்டாத கட்சியும் அல்ல. கடந்த காலங்களில் அவருடன் இணைந்து தேர்தல்களை முன்னெடுத்தோம்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொடுத்த உறுதி மொழியை நாம் கட்டிக்காத்து வந்ததால் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நாம் அடைந்த வெற்றிக்கு அவரும் வாழ்த்து தெரிவித்தார்.

இதன்போது இலங்கையில் பெரும்பாலான பகுதிகளில் வெற்றியீட்டிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முழு இலங்கையிலும் காணப்படும் சபைகள் பலவற்றில் கூட்டு இணைந்தே ஆட்சிகளை முன்னெடுக்க வேண்டிய சூழ்நிலையில் எம்மோடு இணைந்து சபைகளை கூட்டாச்சியாக கைபற்றி மக்களுக்கு சேவை செய்வோம்.

ஆகையால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஊடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைகோர்த்து சபைகளை கைப்பற்றி சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

க. பொ. த. சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் வெளியாகுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவிதார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடக்கூடியதாகவிருக்குமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − seven =

*