;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (13.02.2018)

0

தேர்தல் காலப்பகுதியில் 1148 தேர்தல் முறைப்பாடுகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1148 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 668 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 85 பேர் வேட்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியை ஏற்காவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்

தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் செயற்படாவிட்டால் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வென்னப்புவ பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்ணாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள நான் தயார்: மஹிந்த அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ள தாம் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை நிச்சயமாக நான் ஏற்றுக் கொள்வேன். ஆனால், மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக அதனை வழங்கமாட்டார் என்று எனக்குத் தெரியும்.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கூட்டு எதிரணி ஒருபோதும் சூழ்ச்சிகளில் ஈடுபடாது என்றும் அறிவித்துள்ளார்.

அரசாங்க கணக்காய்வாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் பெறுபேறு, அரசாங்கத்தின் பயணத்தை திசை திருப்பியுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அரசாங்க கணக்காய்வாளருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை முன்வைக்க கூட்டு எதிர்கட்சி தயாராகவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*