;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (14.02.2018)

0

கொழும்பு பகுதியில் பாரிய கட்டிடம் இடிந்தது! ஆபத்தான நிலையில் பலர்

கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று மதியம் 3.1மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தேயிலை களஞ்சிய கட்டிடமொன்றே இவ்வாறு உடைந்து வீழந்துள்ள நிலையில் , இதில் காயமடைந்த இருவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்குண்டுள்ள மேலும் சிலரை மீட்கும் பணியில் காவற்துறையினரால் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையர் ஒருவரை நாடு கடத்த அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை

அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த இலங்கையர் ஒருவரை நாடு கடத்த அந்த நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

த கார்டியன் செய்திதாள் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

சாந்த ரூபன் என்ற குறித்த இலங்கையரை எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் நாடு கடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா சென்ற குறித்த இலங்கையருக்கு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரம் வழங்கிய அனுமதியினையும் ரத்துச் செய்தே இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் குடியேரும் பொருட்டு இவரால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை மனு இரண்டு வருடங்களாக பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு தற்போது நாடுகடத்த அந்த நாட்டு எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சுசில் ப்ரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னர் ஜனாதிபதியால் இந்த அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை , ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலை குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் சிறப்பு அமைச்சரவை கூட்டமொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்வது குறித்து இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + fifteen =

*