;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (15.02.2018)

0

பல பகுதிகளில் நீர் விநியோக தடை

கொழும்பில் பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திர் இருந்து மாளிகாவத்தை வரையிலான நீர் விநியோகப் பிரதான குழாய் கட்டமைப்பில் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதன் காரணமாக நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணியில் இருந்து அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிவரையிலான 24 மணிநேர நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 1, 2, 3, 4, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் இதனால் தடைப்பபடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு 12 மற்றும் 13 ஆகிய பிரதேசங்களில் குறைவான அழுத்தத்துடன் நீர்விநியோகம் காணப்படும் என்றும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

மூடப்படவுள்ள களனிவெலி தொடரூந்து பாதை

களனிவெலி தொடரூந்து பாதை நாளை தொடக்கம் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை இரவு 8 மணி தொடக்கம் 19ஆம் திகதி காலை 4 மணிவரையில் மூடப்படும் என தொடரூந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேற்கொள்ளப்படவுள்ள உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் காரணமாகவே இந்த தொடரூந்து பாதை மூடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக இந்த தொடரூந்து பாதையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான சேவைகளும் இடம்பெறமாட்டது எனவும் தொடரூந்து பொது முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

பல மாகாணங்களில் இன்று பலத்த மழை

வடக்கு, வட மத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்ளின் சில பிரதேசங்களில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் இடைக்கிடை மணித்தியாலத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − one =

*