;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (15.02.2018)

0

வறட்சியான காலநிலை காரணமாக தொடர்ச்சியான மின் விநியோக தடை

நீர்மின் உற்பத்தி செய்யப்படும் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தமையால் நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அடுத்த மாதம் தொடர்ச்சியான மின் விநியோக தடை ஏற்படக்கூடும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் 60.3 வீதத்தாலும், மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 63.8 வீதமாகவும், கொத்மலை நீர்த்தேக்கத்தில் 39.2 வீதமாகவும் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாகவும், இதேவேளை நாளாந்த மின்நுகர்வு மணிக்கு 41 கிகா வொட் (41 gigabytes)காணப்படுவதாகவும், இதன் காரணமாக 100 மெகா வொட் மின்சாரத்தை அனல்மின் உற்பத்தியிலிருந்து தேசிய கட்டமைப்புக்கு இணைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தியுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களனிவௌி தொடரூந்து வீதிக்கு நாளை முதல் பூட்டு

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக களினிவௌி தொடரூந்து வீதி நாளை இரவு 8 மணி முதல் 19ம் திகதி அதிகாலை 4 மணியளவில் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

கான்ஸ்டபில் ஒருவர் மீது தாக்குதல்

சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரொருவரை கைது செய்ய சென்ற மிகிந்தலை காவற்துறையின் கான்ஸ்டபில் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இதன்போது , படுகாயமடைந்த குறித்த கான்ஸ்டபில் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மஹகனதராவ – வம் இவுரயாய 1 பிரதேசத்தின் வயல்வௌியொன்றில் வைத்து நேற்று பிற்பகல் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேநபர் 53 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் , மதுபான போத்தலில் இவ்வாறு காவற்துறை அதிகாரியை தாக்கியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்தது.

பின்னர் சுற்றிவளைப்பிற்கு சென்ற மற்றைய அதிகாரிகளால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 10 =

*